Tharindu Withanage – Page 3 – SRI LANKA POLICE

Author name: Tharindu Withanage

Notable Services - TA

மாத்தளை பொலிஸ் பிரிவிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்காக செயற்கைக் கால்கள் தானமாக வழங்கப்பட்டன

159வது தேசிய பொலிஸ் தினத்தினை முன்னிட்டு, மாத்தளை பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பு பிரிவினால், சமூகத்தை மையமாகக் கொண்ட ஒரு தொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அடங்கிய பிரதேசங்களில் வாழும், முழங்காலுக்கு கீழாக இரு கால்களையும் இழந்தும் ஆதரவின்றி வாழும் II மாற்றுத்திறனாளிகள் சுயமாக அங்கம் இயக்கக்கூடிய செயற்கைக் கால்கள் பெறுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்த உதவிகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, மாத்தளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.கே. விக்கிரமநாயக அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி, மாத்தளை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில், மாத்தளை மாவட்டம் II உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.சி.ஆர். தென்னகோன், சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த விஜேபண்டார, மற்றும் பல பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு, விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். இத்திட்டத்திற்காக, ரூபாய் 6 இலட்சம்  நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளன.  மேலும், இந்த செயற்கைக் கால்கள் வழங்கும் திட்டத்திற்கு சமூக ஆதரவை வழங்கிய கண்டி போ ஹென்டிகெப் நிறுவனம் சார்பாக, அதன் பிரதான கட்டளை அதிகாரி எஸ்.எஸ். அத்தநாயக மற்றும் பிரதான தொழில்நுட்ப அதிகாரி சிசிர குமார ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வுகள், பொலிஸாரின் சமூகப்பணிக்கு எதிரொலியாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Notable Services - TA

திஸ்ஸ வாவியில் அழகை பாதுகாப் போம்.

நாடளாவிய ரீதியில், அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்கள் திஸ்ஸ வாவியை பார்வையிட்டு அதில் நீராடுவதை பெரிதும் விரும்புகின்றனர். இருப்பினும், விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துவரப்பட்டபோதிலும், வாவியின் வளாகத்திற்கு வருபவர்கள் குப்பைகளை ஏரிக்குள் வீசும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால், திஸ்ஸ வாவி சுற்றுவட்டாரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், வாவி வளாகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை முறையாக அகற்றும் சிரமதானம் 2025 செப்டம்பர் 20 அன்று அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு திலிண ஹேவா பத்திரன அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த சிரமதான செயற்பாடு, அனுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், அப்பிரிவின் கீழ் பயிற்சி பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் திஸ்ஸ வாவி பகுதியில் உள்ள நடமாடும் விற்பனையாளர்கள் தங்களது விருப்பத்துடன் இதில் பங்கேற்று ஆதரவு வழங்கினர்.

Special Events - TA

பொலிசாரால் மேற்கொள்ளப்படும் நிவாரணத் திட்டத்திற்கு சீனாவின் ஆதரவு

இலங்கையுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சில் ஊடாக, இலங்கை பொலிஸ் துறையினரால் மேற்கொள்ளப்படும் நிவாரண விநியோகத் திட்டங்களுக்காக, ரூ. 02 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை நன்கொடையாக வழங்கியது. நன்கொடை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வானது 2025.12.03 அன்று காலை பொலிஸ்  விசேட அதிரடிப் படைத் தலைமையகத்தில், சபையின் தலைவர் Zhang Xudong அவர்கள் தலைமையில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி, பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது. சீன கவுன்சில் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின்  கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெனரல் டி.ஜி. சமந்தா டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

Special Events - TA

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை பொலிசாரால் நிவாரணம் வழங்கப்படுகிறது .

சீரற்ற மற்றும் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான ஒரு சிறப்புத் திட்டம் இன்று (டிசம்பர் 02, 2025) இலங்கை பொலிசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தெல்தெனியா பகுதியில் இடம்பெயர்ந்த மற்றும் கடும் வானிலைச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. மனிதாபிமான இந்த நடவடிக்கை கௌரவ பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள்: • உலர் உணவுப் பொருட்கள்• ஆடைகள்• குடிநீர் பாட்டில்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை குறைப்பதே இலங்கை பொலிசின் முதன்மை நோக்கம்.

Special Events - TA

2025 அரச சேவைகள் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைந்த சாம்பியன்ஷிப் – இலங்கை பொலிசுக்கு.

2025 நவம்பர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தியகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 39 ஆவது அரச சேவை மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், மொத்தம் 678 மதிப்பெண்கள் பெற்று, இலங்கை பொலிஸார் ஒருங்கிணைந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். 80 அரச அமைப்புகளிலிருந்து 1,200 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற இப்போட்டியில், பொலிஸ் மெய்வல்லுநர் வீரர்–வீராங்கனைகள் பல பிரிவுகளில் கிடைத்த வெற்றிகளின் மூலம் தேவையான மதிப்பெண்களை எளிதில் குவித்தனர். சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனை – பெ.பொ.கொ. 7809 பி.ஜி. சசித்ரா ஹர்ஷணி ஜயகாந்தி 23 ஆவது ஆசிய முதியோர் தடகள போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற, குற்றவியல் விசாரணைத் துறையில் பணியாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 7809 பி.ஜி. சசித்ரா ஹர்ஷணி ஜயகாந்தி, இப்போட்டியின் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், அவர் இலங்கை பொலிஸின் தற்போதைய திறமையான மெய்வல்லுநர் வீராங்கனை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். சிறந்த மெய்வல்லுநர் வீரர் – பொ.கொ. 90433 டி.ஜி.எஸ். விஜேதுங்க பொலிஸ் விளையாட்டு பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் 90433 டி.ஜி.எஸ். விஜேதுங்க, இப்போட்டியின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் பட்டத்தைப் பெற்றார். சிறந்த புதிய வீரர்கள் • சிறந்த புதுமுக மெய்வல்லுநர் வீரர் – பொலிஸ் கல்லூரியின் கான்ஸ்டபிள் 107601 டி.எம்.பி. பிரபோத • சிறந்த புதுமுக மெய்வல்லுநர் வீராங்கனை – இடுல பொலிஸ் நிலையத்தின் பெண் கான்ஸ்டபிள் 13288 திசாநாயக்க வயது பிரிவின்படி சிறந்தவர்கள் • 50–54 வயது சிறந்த வீராங்கனை – மொனராகல பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் பரிசோதகர் தில்ருக்ஷி • 35–39 வயது சிறந்த வீரர் – பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் 6216 உதய குமார • 35–39 வயது சிறந்த வீராங்கனை – காலி பொலிஸ் நிலைய பெண் கான்ஸ்டபிள் 8646 • 45–49 வயது சிறந்த வீரர் – பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் 39931 ஜி.எம்.எஸ். சரத் குமார இவ் வெற்றிகளுடன், 55–59, 45–49, 40–44, 35–39 வயது பிரிவுகளில் இரண்டாம் இடங்கள், 50–54 வயது பிரிவு சாம்பியன்ஷிப், புதுமுக மற்றும் திறந்த வெளித் தடகள பிரிவுகளின் வெற்றிகளையும் பொலிஸ் வீரர்–வீராங்கனைகள் பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் வெற்றி பெறுவதற்கு, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பொலிஸ் விளையாட்டு சபைத் தலைவர் – பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க, பொலிஸ் விளையாட்டு பிரிவு பணிப்பாளர் – சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் வை.டி.எஸ். பின்பதுவ, மற்றும் பொலிஸ் மெய்வல்லுநர் விளையாட்டு செயலாளர் – சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகம ஆகியோரின் வழிகாட்டல், ஊக்கமும் மிகுந்த பங்கை ஆற்றியுள்ளதாக மெய்வல்லுநர் வீரர்–வீராங்கனைகள் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.

Special Events - TA

தென் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்புகளும் திறமையான விசாரணைகளுக்குமான பரிசில்களும் பாராட்டுகளும்.

விஷப் போதைப் பொருள் பரவிவருவதை இந்நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்கும் நோக்கத்துடன் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக அவர்களின் அறிவுறுத்தலின் படி ஆரம்பிக்கப்பட்ட “அகன்று செல்” முழு நாடுமே ஒன்றான தேசிய செயற்பாட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 செப்டம்பர் 2025 ஆம் திகதி மாலை வேளையில் தங்காலை பொது விளையாட்டரங்கில் அனைவரையும் ஒன்றினைத்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட இச் சந்திப்பானது விசேட அம்சமாக ஒன்றான தென் மாகாணத்தினுள் வெற்றிகரமாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களால் பெருமளவிலான போதைப் பொருள்களை கைப்பற்றியது மாத்திரமின்றி, சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் ஆயுதங்கள், அதன் தோட்டாக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதுடன் அதற்கு தொடர்புடைய சந்தேகநபர்களையும் கைதுசெய்வதற்கு முடிந்துள்ளது.  பாரதூரமான குற்றங்களை மிகவும் திறமையான முறையில் கையாண்டு அவற்றை தீர்த்து வைத்து கௌரவமான பொலிஸ் சேவையை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களையும் பாராட்டி அவர்களுக்கும் பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. சிவில் பாதுகாப்புப் படையணியின் புலனாய்வாளர்களாக தகவல்களை வழங்கிய உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாத போதும் அவர்களுக்கும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த காலங்களில் தெற்கு கடற்கரையில் பெருந்தொகையான போதைப் பொருள்கள், ஆயுதங்களும் அதன் தோட்டாக்களுடன் சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு முடிந்ததன் காரணமாக கௌரவ ஜனாதிபதி அவர்களால் கடற்படை உத்தியோகத்தர்களுக்கும் பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. மேலும், 13.04.2025 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகாமையில் 53 கிலோ 300 கிராம் எடையைக் கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 60 கிலோ 660 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப் பொருளுடன் லொரியுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். 04.04.2018 ஆம் திகதி கொஸ்கொடை இரட்டைக் கொலையில் சந்தேகநபர்களை டி–56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர். 06.08.2025 ஆம் திகதி விரகெட்டிய ஹன்புன்ன பிரதேசத்தில் டி–56 ரக துப்பாக்கியும் 30 தோட்டாக்களும் கைப்பற்றியமை. 05 ஜூலை 2020 ஹினிதும பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெண் ஒருவர் காணாமல் போன விவகாரத்தை மனிதப்படுகொலை என்பதை கண்டறிந்தமையும் அதற்குத் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்தமை. 30.06.2025 ஆம் திகதி மாத்தறை மற்றும் தெய்யந்தறை பிரதேசத்தில் AK–47 செயற்பாட்டுத் துப்பாக்கியும் கைத் துப்பாக்கியும் 12080 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும் இதற்கு தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிசில்களை பெற்றவர்கள் வெற்றிகரமாக கைதுகளின் சில ஆகும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பானது குறிப்பிட்ட காலங்களில் மேலும் வெற்றிகரமாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, அதன் தலைமைத்துவத்தை வழங்குதல் போன்று தகவல்களை வழங்குவதற்கு முன்னின்றுச் செயற்பட்டு அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பொறுப்பு கோரும் அனைவரும் தனது தாய்நாட்டுக்காக உறுதிமொழியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிக்குமார்கள் மற்றும் ஏனைய மதக் குருமார்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரயந்த வீரசூரிய அவர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவினர்கள், பிரதேச பொதுமக்களின் கலந்துகொள்வதோடு இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

Special Events - TA

சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன அவர்கள் நிர்வாகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு கடமையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பம்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன அவர்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க பொலிஸ்மா அதிபரின் இடமாற்றக் கட்டளையின் படி, கடந்த 18 நவம்பர் 2025 அன்று பொலிஸ் தலைமையகத்தில் இலங்கை பொலிஸின் நிர்வாக அதிகாரியாக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சிரேஷ்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் (நிர்வாகம்) என்பது, பொலிஸ்மா அதிபர் விடுமுறையில் செல்லும் போதும் அல்லது வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடும் நேரங்களிலும் பதில்பொலிஸ்மா அதிபராக செயல்படும் பொறுப்புடைய பதவியாகும். பொலிஸ்மா அதிபருக்குப் பின்னர் அமைந்துள்ள இத்தகைய உயரிய பதவி, இலங்கை பொலிஸின் மொத்த நிர்வாகத்தையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். கொழும்பு பல்கலைக்கழகத்தில் அறிவியல் (இயற்பியல்) துறையில் பட்டம் பெற்று, 1999 ஆம் ஆண்டு களுத்துறை பொலிஸ் கல்லூரியில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிசில் இணைந்த சிரேஷ்ட துணைப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன அவர்கள், பிரிவு பொறுப்பாளர் அதிகாரியாகவும், பின்னர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகராகவும், பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் நாடு முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ஒழுக்கம், திறமை மற்றும் சேவை சிறப்பு ஆகியவற்றால் புகழ்பெற்ற அதிகாரியாகவும் இவர் அறியப்படுகிறார்.

Special Events - TA

2025 – பொலிஸ் கரப்பந்தாட்டப் போட்டி ஆரம்பம்நிகழ்வு நடைபெற்ற தேதி: 05 நவம்பர் 2025 (இன்று)நேரம்: காலை 6.30 மணி.

இடம்: கொழும்பு பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையக விளையாட்டு மைதானம் பங்கேற்பு: • மொத்தம் 104 அணிகள் o 37 பெண் பொலிஸ் அணிகள் o 67 ஆண் பொலிஸ் அணிகள் தலைமை: இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களின் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. போட்டியின் தன்மைகள்: • அனைத்து பொலிஸ் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த அணிகள் பங்கேற்றுள்ளன. • பிரிவுகளின் மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளின் மூலம் சிறந்த அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. • இறுதி போட்டி 07 நவம்பர் 2025 மாலை நடைபெறும். விருது வழங்கல்: அன்று மாலை, பொலிஸ்மா அதிபர் அவர்களின் தலைமையில் சிறந்த அணிகளுக்கான கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

Special Events - TA

பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம் டேக்வாண்டோ போட்டியில் பொலிஸ் விசேட அதிரடிப் படைக்கு வெற்றி.

பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா இலங்கைக்கான கொரியா தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon LEE) அவர்களின் தலைமையிலும், பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடனும், 2025 நவம்பர் 4ஆம் திகதி மாலை, இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கொரியாவில் தோன்றி உலகப் புகழ் பெற்ற தற்காப்புக் கலையாகிய டேக்வாண்டோ (Taekwondo) கலை, இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சிக் காலத்திலிருந்தே பல ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய போட்டிகள் மாகாண மட்டத்திலும் நடத்தப்பட்டு, மேலும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் கொரிய கௌரவம் பெற்ற 6வது டான் கருப்பு பட்டை (6th Dan Black Belt) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை நடைபெற்ற போட்டியின் ஆரம்ப சுற்றுகள் அண்மையில் கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பயிற்சி பள்ளியில் நடைபெற்றன. 58 கிலோகிராம் கீழ் எடைப்பிரிவின் இறுதி போட்டி நிறைவு விழா மத்தியில் நடத்தப்பட்டது. அதில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் • பொலிஸ் கான்ஸ்டபிள் 105855 N.P.N. பிரநந்து மற்றும் • பொலிஸ் கான்ஸ்டபிள் 101324 R.M.K.N. ரத்நாயக்க ஆகியோர் மோதிய கடும் போட்டியில், R.M.K.N. ரத்நாயக்க அவர்கள் வெற்றி பெற்றார். ஆரம்பத்தரத்தின் சிறந்த ஆண் விளையாட்டாளர் விருது, மேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கலுத்துறை பொலிஸ் கல்லூரி பொலிஸ் கான்ஸ்டபிள் 60105 W.M.M. விஜேசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கிண்ணம் இலங்கை பொலிஸ் டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் மற்றும் மனிதவள முகாமைத்துவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் பிராந்தியத்திற்குப்  பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.என். சிசிர குமார அவர்களின்  கரங்களால் வழங்கி வைக்கப்பட்டது. ஆரம்பத்தரத்தின் சிறந்த பெண் விளையாட்டாளர் விருது, சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த வரகாபொல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 10398 N.D.S.P. வீரவர்தன அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டீ சொய்சா அவர்கள் வழங்கி வைக்கினார். சிரேஷ்டப் போட்டியில் சிறந்த விளையாட்டாளர் விருதை பொலிஸ் கான்ஸ்டபிள் 101324 R.M.N.K. ரத்நாயக்க அவர்கள் பெற்றார். பொலிஸ்மா அதிபர் மற்றும் கொரியா தூதுவர் அவர்களும் பயிலுநர்களின் போட்டியில் சாம்பியன் போட்டியில் வெற்றிப் பெற்ற மேல் மாகாண அணிக்கு வெற்றிக் கிண்ணமும் ஒட்டுமொத்த போட்டிகளிலும் அதாவது டேக்வாண்டோ கிண்ணத்தை சுவீகரீத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை டேக்வாண்டோ அணிக்கும் இணைந்து வழங்கி வைத்தனர்.    மேலும், இரத்தினபுரி Diamond Kick டேக்வாண்டோ கழகத்தினர் வழங்கிய சிறப்பு கலை நிகழ்ச்சியும், பொலிஸ் கலாச்சார பிரிவின் நடனக் குழுவின் நிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன. இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளும் Sri Lanka Police அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

Special Events - TA

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு ஒரு புதிய ஆரம்பம்

இலங்கையில் சர்ச்சைக்குரிய குற்றங்கள் மற்றும் தீர்மானிக்கப்படாத பழைய குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், இலங்கை பொலிஸின் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் (CCIB) தனது செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த புதிய அமைப்பு, சட்டவிரோத சொத்துக்கள், மனித படுகொலைகள், திட்டமிட்ட குற்றங்கள், கணினி குற்றங்கள், மனித கடத்தல், விற்பனை மற்றும் கடற்சார் குற்றங்கள் உள்ளிட்ட பலவகை குற்றங்களை விசாரிக்கப்படுகின்றது. இதன் மூலம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திற்கு நேரடியாக உதவுவதோடு, நாட்டில் இயங்கும் குற்ற வலையமைப்புக்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு,  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது இப்பணியகத்தின் பிரதான நோக்கமாகும். இப்பணியகத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், விசாரணைகள் திறம்பட மேற்கொள்ளவும், நாராஹென்பிட்டி தொழில் திணைக்களக் கட்டடத்தில் தற்போது இவ் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. பணியகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 2025 செப்டம்பர் 4ஆம் திகதி நடைபெற்றதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்தினாயக, மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்குப் பொறுப்பான  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரண்மல் கொடிதுவக்கு, மற்றும் பணியகத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவசம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Scroll to Top