Tharindu Withanage – Page 5 – SRI LANKA POLICE

Author name: Tharindu Withanage

Special Events - TA

ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃகிராஞ்ச், பொலிஸ்மா அதிபரை சந்தித்தார்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃகிராஞ்ச் அவர்கள், பொலிஸ்மா அதிபருக்குமிடையில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று 28 ஆகஸ்ட 2025 அன்று மாலை இடம்பெற்றது.  இலங்கை பொலிஸ் மற்றும் ஜக்கிய நாடுகள் சபைகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் கடமைகளின் வசதிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

Special Events - TA

பொலிஸ்மா அதிபர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 28 ஆம் திகதி பகல், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை பொரளையில்  அமைந்துள்ள கொழும்பு பேராயர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து, சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  இச் சந்திப்பின் போது குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர அவர்களும் கலந்துகொண்டார்.  சந்திப்பின் இறுதியில், பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பொலிஸ்மா அதிபர் அவர்களை ஆசிர்வாதம் வழங்கி, வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இச் சந்திப்பு நினைவு கூறும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களால், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 

Special Events - TA

பொலிஸ்மா அதிபர் மற்றும் விமானப் படைத் தளபதிக்கிடையிலான சந்திப்பு

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக 2025.08.25 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை சந்தித்தார்.  ஶ்ரீ ஜயவர்த்தனபுர விமானப் படை முகாமின் கட்டளையிடும் அதிகாரி எயார் கமாண்டர் புத்திக பியசிறி அவர்களால் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது, மேலும், இலக்கம் 43 வண்ணப் பிரிவினரால் மரியாதை அணிவகுப்பு  வழங்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கிடையில் நட்புரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது விமானப்படைத் தளபதி பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இச் சந்திப்பின் நினைவாக இருவரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். 

Special Events - TA

பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025.08.25 ஆம் திகதி காலை, பாதுகாப்பு அமைச்சில் இந் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப்பெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ் சம்பத் துய்யகொந்தா அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். பொலிஸ்மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இச்சந்திப்பின் போது, பொலிஸ்மா அதிபர் அவர்களால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர் அவர்களும், பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

Special Events - TA

புதிய பொலிஸ் மா அதிபர் பிரதமரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 ஆகஸ்ட 22 ஆம் திகதி மாலை வேளையில் பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் கௌரவ  கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களையும் மற்றும் பிரதமரின் செயலாளர் ஜீ.பீ.சபுதந்திரி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.  சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு பிரதமர் மற்றும் செயலாளர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இம் முக்கிய சந்திப்பை நினைவு கூர்ந்த வகையில், பொலிஸ்மா அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 

Special Events - TA

புதிய பொலிஸ்மா அதிபருக்கு விசேட அதிரடிப் படையினரால் முதன்மை மரியாதை அணிவகுப்பு

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி இன்று காலை, பொலிஸ் விசேட அதிரடிப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். அவர் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டீ.ஜீ. சமந்த த சில்வா மற்றும் தலைமையகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை சந்தித்தார். பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படை தலைமையகத்துக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் ஆரம்பத்தில், அவருக்கு விசேட அதிரடிப் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், நாட்டில் ஏற்படும் எந்தவொரு அவசர நிலைகளுக்கும் சந்திப்பதற்காக எப்போதும் தயாராக இருப்பதோடு, திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தவும், சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கவும் விசேட அதிரடிப் படை வழங்கும் தனித்துவமான பங்களிப்பானது, இந்நாட்டிற்கும் இலங்கை பொலிஸ் துறைக்கும் பெருமைக்குரியதாக இருப்பதாகக் கூறினார். மேலும், இப் படையின் திறன்கள், வலிமைகள் மற்றும் விரைவான செயற்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

Special Events - TA

கொழும்பு வடக்கு பகுதியில் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்திற்கு புதிய கட்டடம் திறந்து வைப்புகொழும்பு – ஆகஸ்ட் 21, 2025

சகல நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பிரிவுக்கான சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் புதிய கட்டடம், மோதரை பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, இலங்கை பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்தது. இப் புதிய கட்டடம், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் தனித்தன்மை பாதுகாக்கப்படும் சூழலில் குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை பெறும் சூழல் உருவாக்கப்படுவதற்காகவும் இப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டம், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவிப் பிரிவின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதானி Ohashi Kenji  பிரதம விருந்தினராக இந் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த புதிய கட்டடத்தில்:  • தாய்மார்கள் தங்களது குழந்தைகளைத் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய தனியுரிமையுடன் கூடிய இடங்கள் • சிறுவர் பூங்கா • பெண்களுக்கு ஓய்வறைகள் போன்ற பல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, கொழும்பு வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஷ்பகுமார, சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி H.W.I.S. முத்துமால, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Special Events - TA

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளரின் வாழ்த்துச் செய்தி

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025.08.20 ஆந் திகதியன்று மாலை வேளையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள், பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல அவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப் பெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.டபிள்யூ.ஆர்.பீ செனவிரத்ன ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.  சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், இம் முக்கிய சந்திப்பை நினைவு கூர்ந்த வகையில், பொலிஸ்மா அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 

Special Events - TA

YouTube சில்வர் ப்ளே பட்டன் பொலிஸ்மா அவர்களிடம் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.

பொலிஸ் ஊடகப்பிரிவில் நிர்வகிக்கப்படும் Sri Lanka Police  உத்தியோகபூர்வ யூடியுப் சேனலில் ஒரு இலட்சம் இணைப்பாளர்களை (Subcribes) அடைந்ததைத் தொடர்ந்து யூடியுப் நிறுவனத்தினால் வழங்கப்படும் சில்வர் ப்ளே பட்டன் (Silver Play Button) விருதைப் பெற்றுள்ளது.  2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை, பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான எஃப்.யூ.வுட்லர் அவர்களும் பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மேற்பார்வை அதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் ஆகயோர் இணைந்து சில்வர் ப்ளே பட்டன் (Silver Play Button) விருதை பொலிஸ்மா அதிபரிடம்  உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர்.  இதன்போது பொலிஸ்மா அதிபர் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு, மனிதாபிமான மற்றும் சமூக சேவைகள் தொடர்பாக தெளிவூட்டும் நோக்கில், இலங்கைப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தயாரிக்கப்படும் காணொலிகள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.  அத்துடன், “இந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்பரப்பு நடவடிக்கைகள், குறுகிய காலத்திலேயே இலங்கை பொலிஸ் YouTube சேனலுக்கு 100,000 இற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பாளர்களைப் பெற்றுத் தந்த முக்கிய காரணிகளாகும். இது பொலிஸ் ஊடகப்பிரிவின் தனித்துவமான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இச் சாதனை, இலங்கைப் பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் தரமான, நேர்மையான மற்றும் பொது நலனுக்கான தகவல்களை வழங்கும் அரச நிறுவனமாக இலங்கைப் பொலிசின் கௌரவத்தை இந்த வெற்றி மேலும் உயர்த்துகிறது” என்றும் “எதிர்காலத்தில் YouTube சேனலை மேலும் பயனுள்ள மற்றும் மக்களை ஈர்க்கும் தகவல் ஊடகமாக மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Special Events - TA

இலங்கை பொலிஸ் சேமிப்பு சங்கத்தின் 98ஆவது பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

இலங்கை பொலிஸ் சேமிப்பு சங்கத்தின் 98ஆவது பொதுக்கூட்டம், 2025 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பகல், கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 1924ஆம் ஆண்டு, அப்போதைய பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட ஜே.டி. எயிட்கன் அவர்களின் முனைப்பில் தொடங்கப்பட்ட இந்த சங்கம், பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கம் இன்றும் தொடர்ந்தே நிலைத்து நிற்கின்றது. பொதுக்கூட்டத்தில், சங்க நிர்வாகக் குழுவின் தலைவர் மற்றும் உதவிச் சேவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ராஜித்த ஶ்ரீ தமிந்த, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் போது, சங்கத்தின் யாப்பு அடிப்படையில் முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான புதிய நியமன யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், பொலிஸ்மா அதிபர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வதற்கு நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Scroll to Top