Tharindu Withanage – Page 7 – SRI LANKA POLICE

Author name: Tharindu Withanage

Special Events - TA

வடமேல் மாகாணத்திற்கான குற்றப் பிரிவு திறந்து வைப்பு.

இலங்கை பொலிசின் நிருவாக திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு இணையாக அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப் பிரிவுகளை வலுவூட்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெஹெர பொலிஸ் வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண குற்றப் பிரிவு 03.08.2025 ஆந் திகதியன்று கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களின் தலைமையில், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இதன் பணியாக புத்தளம், குருநாகல், குளியாபிட்டி மற்றும் நிக்கவெரட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் குற்றங்களை ஏற்படுத்தும் கும்பல்களை கட்டுப்படுத்தல், சட்ட விரோத போதைப் பொருள் வலையமைப்பை முடக்குவதனூடாக போதைப் பொருள்களை கடத்தல்களை ஒழித்தல் மற்றும் சகல குற்றங்களை இல்லாதொழிப்பது மாத்திரமின்றி  அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட விசாரணைக் குழுக்களின் ஊடாக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.  இந் நிகழ்வில் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. அஜித் ரோஹண அவர்களும், வடமேல் மாகாணப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சரத்குமார அவர்கள் மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Special Events - TA

வடமேல் மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைத்தல்.

வடமேல் மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்காக  பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் 03.08.2025 அன்று குருநாகல் மலியாதேவ கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்களும் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. அஜித் ரோஹண அவர்களும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும்  கலந்துகொண்டனர். இந் நிகழ்வின் போது அதிகளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன் அனைவருக்கும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டின் அமைதியை பேணுவதற்காக 24 மணித்தியாலங்களும் அர்ப்பணிப்புடன் செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டியதுடன் அவர்களின் நலன்புரி தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்களும் பதில் பொலிஸ்மா அவர்களும் இந் நிகழ்வில் உரையாற்றினர். 

Special Events - TA

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் பங்கேற்றார்

02.08.2025 ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற  இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக சட்டத்தரணி சங்கத்தின் 02 வது மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.  இந் நாட்டின் பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன  அவர்களின் தலைமையில் சட்டத்தரணிகள், நிறுவன தலைவர்கள், தேசிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப  கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் இத் துறையிலுள்ள நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை முகம்கொடுக்கும் சட்ட சவால்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிஜிட்டல் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், சைபர் குற்றங்கள் தொடர்பாகவும், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தல் மற்றும் தரவுகளை பாதுகாப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை பொலிசார் கவனத்தை செலுத்தி இக் காலத்திற்கு ஏற்றவாறு தற்போதைய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் முறைமை தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

Special Events - TA

பொலிஸ் சேவை வனிதையர் அன்னையர் பிரிவின் பொதுக்குழு கூட்டம் – 2025

பொலிஸ் சேவையிலுள்ள அனைத்து தரத்திலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்புரிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் எதிர்காலத்திற்கான புதிய உத்தியோகத்தர்கள் குழுவை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டமானது பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 02.08.2025 ஆந் திகதி காலை வேளையில் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திலுள்ள  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் தலைவரும் பதில்  பொலிஸ்மா அதிபரின் துனைவியுமான சட்டத்தரணி திருமதி. நில்மினி சமரதுங்க அவர்களும், ஓய்வுப்பெற்ற பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன அவர்களின் துனைவி, சேவை வனிதையர் அன்னையர் பிரிவின் ஆலோசகருமான சிரேஷ்ட சட்டத்தரணி அனோமா குனதிலக ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதுடன். அப் பிரிவின் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  புதிய உறுப்பினர்களை பதிவு செய்தல், கடந்த வருடம் கணக்கறிக்கை சமர்ப்பித்தல் போன்றவை இக்கூட்டத்தில் இடம்பெற்றதுடன், புதிய பதவிக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான உள்ளக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப நலன்புரிக்காக எதிர்கால புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது  தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டுள்ளது.  யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தலைவர் – சட்டத்தரணி திருமதி. நில்மினி நீட்டா சமரதுங்க அவர்கள். உபத்தலைவர் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் திருமதி. நிஷானி செனவிரத்ன அவர்கள். செயலாளர் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் திருமதி. ரேணுகா ஜயசுந்தர அவர்கள். பொருளாளர்  – சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திருமதி. மதாரா ஆரியசேன அவர்கள்.  உப பொருளாளர் –  பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் திருமதி. நிமாலி பொன்சேகா அவர்கள்  

Special Events - TA

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்.  

மாத்தறை மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுகளில் பதிவாகும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மாகாணத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று 29.08.2025 ஆந் திகதி மாத்தறை சனச மண்டபத்தில் நடைபெற்றது.   கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்றம் அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையிலும் அமைச்சின் செயலாளர் ஓய்வுப்பெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ரவி செனவிரத்ன அவர்கள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் மற்றும் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட தோடு கடமைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும்  பிரச்சனைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களின் நலன்புரிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

Scroll to Top