Jayasinghe – SRI LANKA POLICE

Author name: Jayasinghe

Supply - TA

கொள்முதல்

இலங்கை பொலிஸ் பிரிவிற்கு 750 எண்ணிக்கையிலான 250CC மோட்டார் சைக்கிள்கள் கொள்முதல்   Newspaper Advertisement Bid Document 2026 ஆம் ஆண்டிற்கான வழங்குனர்கள் / ஒப்பந்ததாரர்களை பதிவு செய்தல்   Newspaper advertisement Main ApplicationInstructions and Conditions SheetDetailed Category ListApplication for Foreign Suppliers

Special Events - TA

மேல்மாகாணம் மற்றும் அதிவேக வீதிகளில் GovPay இன் ஊடாக தண்ட பணத்தை செலுத்த முடியும்.

2011 ஆண்டிலிருந்து தண்டப்பணம் செலுத்தப்படும் முறைமையை புதிய பரிமானத்துடன் செயற்படுத்தும் முயற்சிகளின் பலனாக Digital payment System திட்டமானது வெற்றிகரமாக பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளும் இதில் இணைந்துள்ளது. முதற்கட்டமாக அநுராதபுரம், கவரக்குளம், திரப்பனை, மரதன்கடவள, கெகிராவை, மடாட்டுகம, குருநாகல், கொக்கரெல்ல, மெல்சிரிபுர, தொரட்டியாவ, தம்புள்ளை, கலேவெல ஆகிய 12 பொலிஸ் நிலையங்களில் கைத்தொலைபேசிகளை உபயோகித்து இத் திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக Digital payment System என்ற திட்டமானது வெற்றியடைந்துள்ளது. பொலிசார் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மேலும் இத் திட்டத்தை விரிவுப்படுதி மேல் மாகாணங்கள் மற்றும் அதிவேக வீதிகளில் இடம்பெறும் சகல போக்குவரத்து குற்றங்கள் GovPay ஊடாக தண்டப்பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் 28.07.2025 ஆந் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் ரத்நாயக்க அவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஐயபால அவர்களின் தலைமையில் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடன் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அறிமுகப்படுள்ளது.   இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக படிப் படியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும், பொதுமக்களிடம் தெளிவுப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து குற்றங்கள் மற்றும் விபத்துகளை தடுப்பதற்கு மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் வழங்குவதை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Digital payment System திட்டமானது எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Special Events - TA

சப்ரகமுவ மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் புதிய குற்ற விசாரணைப் பிரிவு திறந்து வைப்பு.

சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகும் ஏதேனும் கடுமையான குற்றங்கள் அல்லது முறைப்பாடுகளை உடனடியாக நிவர்த்திசெய்வதற்காக தங்களிடமுள்ள திறனை மேலும் மேம்படுத்துவதற்காக குருவிட்ட பொலிஸ் நிலைய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாணக் குற்ற விசாரணை பிரிவானது பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையின் கீழ் 19.07.2025 ஆந் திகதி  மாலை வேளையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் மாஅதிபருடன் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த குணரத்ன அவர்களும் இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள மஹகிரில்ல அவர்களும் இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸ அவர்கள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Wanted - TA

லியன அத்துகோரலலாகே தொண் நிரோஷன் சமீர

தொலைபேசி அழைப்புகள் ஊடாக அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக சமூகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்புகளைப் பேணி பரிசுப் பொதிகள் வழங்குவதாக கூறி அப் பரிசில்களை பெற்றுக்கொள்வற்கு அவர்களிடமிருந்து வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடப்பட்டு பண மோசடிகளில் ஈடுபட்டதுடன், சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கை பயன்படுத்தியமை தொடர்பிலும், பெறப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகவல்கள் தொடர்பாகவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணை – 02 அலகின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் நீதிமன்றின் உத்தரவை மீறி பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் மறைந்திருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்தால் அல்லது கைது செய்வதற்காக உதவக்கூடிய தகவல் அறிந்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும். சந்தேகநபர் – பெயர் – லியன அத்துகோரலலாகே தொண் நிரோஷன் சமீரதே.அ.அ – 780232196 vவிலாசம் – இஹல போமிரிய, கடுவலை தொலைபேசி இலக்கம் – பொறுப்பதிகாரி நிதி விசாரணை அலகு (02) – 071 – 8594911குற்றவியல் விசாரணைத் திணைக்களம் – 011 – 2320140

Special Events - TA

சப்ரகமுவ மாகாணத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களுடன் பொலிஸ்மா அதிபர் இரத்தினபுரிக்கு வருகை.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் வைபவமானது பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 19.07.2025 ஆந் திகதி மாலை வேளையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அங்கு அடையாளம் காணப்பட்ட 34 பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸ்மா அதிபர் அவர்களால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 24 மணி நேரமும் தனது சிறப்பான சேவைகள் மூலம் நாட்டின் ஒழுங்கை பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணிக்கும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைகளையும் பாராட்டியதுடன், அவர்களின் நலன்புரிகளுக்காக செயல்படுத்தப்படும் எதிகாலத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கினார். இந் நிகழ்வுக்காக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குனரத்ன அவர்களும், இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள மஹகிரில்ல அவர்கள், இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸ அவர்கள் மற்றும் மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். 

Special Events - TA

ஓபநாயக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் அலகுக்கு புதிய கட்டடம்.

இரத்தினபுரி பிரிவின் ஓபநாயக பொலிஸ் நிலைய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் கட்டடம் சகல வசதிகளுடன் 20.05.2025 ஆந் திகதி மாலை வேளையில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குனதிலக அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்டுகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்கள் முகம் கொடுக்கும் குற்றங்கள் தொடர்பாகவும், அவர்களின் தனியுரிமைகள் பாதுகாக்கும் வகையில் முறைப்பாடுகளை செய்வதற்கான முறையான சூழலை உருவாக்குவதற்கும், அவர்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கும், பொலிசார் கடமையாற்றுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும்  இவ்வாறு நவீன வசதிகளுடன் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தை ஸ்தாபிக்கப்படுவதற்கான நோக்கமாகும். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் இத் திட்டமானது நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இக்கட்டடமானது இவ்வாறு கட்டப்பட்ட ஒரு கட்டடமாகும். இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுல மஹகிரில்ல அவர்களும், இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கப்பில பிரேமதாச அவர்களும் உயர் அதிகாரிகளும் இதன் போது கலந்துகொண்டனர்.

Scroll to Top