Special Events – TA – Page 4 – SRI LANKA POLICE

Special Events – TA

Special Events - TA

பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025.08.25 ஆம் திகதி காலை, பாதுகாப்பு அமைச்சில் இந் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப்பெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ் சம்பத் துய்யகொந்தா அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். பொலிஸ்மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இச்சந்திப்பின் போது, பொலிஸ்மா அதிபர் அவர்களால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர் அவர்களும், பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

Special Events - TA

புதிய பொலிஸ் மா அதிபர் பிரதமரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 ஆகஸ்ட 22 ஆம் திகதி மாலை வேளையில் பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் கௌரவ  கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களையும் மற்றும் பிரதமரின் செயலாளர் ஜீ.பீ.சபுதந்திரி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.  சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு பிரதமர் மற்றும் செயலாளர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இம் முக்கிய சந்திப்பை நினைவு கூர்ந்த வகையில், பொலிஸ்மா அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 

Special Events - TA

புதிய பொலிஸ்மா அதிபருக்கு விசேட அதிரடிப் படையினரால் முதன்மை மரியாதை அணிவகுப்பு

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி இன்று காலை, பொலிஸ் விசேட அதிரடிப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். அவர் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டீ.ஜீ. சமந்த த சில்வா மற்றும் தலைமையகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை சந்தித்தார். பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படை தலைமையகத்துக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் ஆரம்பத்தில், அவருக்கு விசேட அதிரடிப் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், நாட்டில் ஏற்படும் எந்தவொரு அவசர நிலைகளுக்கும் சந்திப்பதற்காக எப்போதும் தயாராக இருப்பதோடு, திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தவும், சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கவும் விசேட அதிரடிப் படை வழங்கும் தனித்துவமான பங்களிப்பானது, இந்நாட்டிற்கும் இலங்கை பொலிஸ் துறைக்கும் பெருமைக்குரியதாக இருப்பதாகக் கூறினார். மேலும், இப் படையின் திறன்கள், வலிமைகள் மற்றும் விரைவான செயற்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

Special Events - TA

கொழும்பு வடக்கு பகுதியில் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்திற்கு புதிய கட்டடம் திறந்து வைப்புகொழும்பு – ஆகஸ்ட் 21, 2025

சகல நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு வடக்கு பிரிவுக்கான சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் புதிய கட்டடம், மோதரை பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு, இலங்கை பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்று முடிவடைந்தது. இப் புதிய கட்டடம், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் தனித்தன்மை பாதுகாக்கப்படும் சூழலில் குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் தடுக்கும் நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை பெறும் சூழல் உருவாக்கப்படுவதற்காகவும் இப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டம், ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவிப் பிரிவின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதானி Ohashi Kenji  பிரதம விருந்தினராக இந் நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த புதிய கட்டடத்தில்:  • தாய்மார்கள் தங்களது குழந்தைகளைத் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய தனியுரிமையுடன் கூடிய இடங்கள் • சிறுவர் பூங்கா • பெண்களுக்கு ஓய்வறைகள் போன்ற பல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் மேல் மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, கொழும்பு வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் புஷ்பகுமார, சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி H.W.I.S. முத்துமால, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Special Events - TA

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளரின் வாழ்த்துச் செய்தி

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025.08.20 ஆந் திகதியன்று மாலை வேளையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள், பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல அவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப் பெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.டபிள்யூ.ஆர்.பீ செனவிரத்ன ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.  சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், இம் முக்கிய சந்திப்பை நினைவு கூர்ந்த வகையில், பொலிஸ்மா அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 

Special Events - TA

YouTube சில்வர் ப்ளே பட்டன் பொலிஸ்மா அவர்களிடம் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.

பொலிஸ் ஊடகப்பிரிவில் நிர்வகிக்கப்படும் Sri Lanka Police  உத்தியோகபூர்வ யூடியுப் சேனலில் ஒரு இலட்சம் இணைப்பாளர்களை (Subcribes) அடைந்ததைத் தொடர்ந்து யூடியுப் நிறுவனத்தினால் வழங்கப்படும் சில்வர் ப்ளே பட்டன் (Silver Play Button) விருதைப் பெற்றுள்ளது.  2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை, பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான எஃப்.யூ.வுட்லர் அவர்களும் பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மேற்பார்வை அதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் ஆகயோர் இணைந்து சில்வர் ப்ளே பட்டன் (Silver Play Button) விருதை பொலிஸ்மா அதிபரிடம்  உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர்.  இதன்போது பொலிஸ்மா அதிபர் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு, மனிதாபிமான மற்றும் சமூக சேவைகள் தொடர்பாக தெளிவூட்டும் நோக்கில், இலங்கைப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தயாரிக்கப்படும் காணொலிகள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.  அத்துடன், “இந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்பரப்பு நடவடிக்கைகள், குறுகிய காலத்திலேயே இலங்கை பொலிஸ் YouTube சேனலுக்கு 100,000 இற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பாளர்களைப் பெற்றுத் தந்த முக்கிய காரணிகளாகும். இது பொலிஸ் ஊடகப்பிரிவின் தனித்துவமான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இச் சாதனை, இலங்கைப் பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் தரமான, நேர்மையான மற்றும் பொது நலனுக்கான தகவல்களை வழங்கும் அரச நிறுவனமாக இலங்கைப் பொலிசின் கௌரவத்தை இந்த வெற்றி மேலும் உயர்த்துகிறது” என்றும் “எதிர்காலத்தில் YouTube சேனலை மேலும் பயனுள்ள மற்றும் மக்களை ஈர்க்கும் தகவல் ஊடகமாக மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Special Events - TA

இலங்கை பொலிஸ் சேமிப்பு சங்கத்தின் 98ஆவது பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

இலங்கை பொலிஸ் சேமிப்பு சங்கத்தின் 98ஆவது பொதுக்கூட்டம், 2025 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பகல், கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக இடம்பெற்றது. 1924ஆம் ஆண்டு, அப்போதைய பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட ஜே.டி. எயிட்கன் அவர்களின் முனைப்பில் தொடங்கப்பட்ட இந்த சங்கம், பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கம் இன்றும் தொடர்ந்தே நிலைத்து நிற்கின்றது. பொதுக்கூட்டத்தில், சங்க நிர்வாகக் குழுவின் தலைவர் மற்றும் உதவிச் சேவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ராஜித்த ஶ்ரீ தமிந்த, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் போது, சங்கத்தின் யாப்பு அடிப்படையில் முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான புதிய நியமன யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், பொலிஸ்மா அதிபர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வதற்கு நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Special Events - TA

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்

இலங்கையின் புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி மாலை, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி புதிய பொலிஸ்மா அதிபருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இச்சந்திப்பு நினைவாகும் வகையில், பொலிஸ்மா அதிபரால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டதுடன், மரியாதையும் செலுத்தப்பட்டது. மேலும், சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

Special Events - TA

இலங்கையின் 37வது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய அவர்கள் பொறுப்பேற்றார்

இந் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு உறுதிப்பூண்டுள்ள இலங்கை பொலிஸ் துறைக்கு, சிறந்த தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 ஆகஸ்ட் 14 ஆம் திகதி காலை, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக தனது கடமையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார்.   பொலிஸ்மா அதிபர், கொழும்பு 02 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மறியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டதுன், பௌத்த மதகுருமார்கள் மற்றும் பிற மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் சுப நேரத்தில் தனது கடமையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.  புதிய பொலிஸ்மா அதிபர் நிகழ்வில் உரையாற்றியபோது, தனது பல ஆண்டுகால பொலிஸ் சேவையில் எதிர்கொண்ட சவால்களையும், சேவைக்கான அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்தார். மேலும், குற்றங்களை ஒழிக்க புதிய செயல்முறைகளை முன்னெடுத்து, பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், இலங்கை பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையேயான நம்பிக்கையை மீட்டெடுத்து, பொலிஸ் சேவையை மேலும் மதிப்புமிக்க, மக்களிடம் செவிகொடுக்கக்கூடியதாக மாற்றங்களை ஏற்படுத்தும்  நோக்கத்துடன், தேவையான மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் உறுதி அளித்தார்.

Special Events - TA

இலங்கையின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய நியமனம்

சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள், அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன், கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 37 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, 2025 ஆகஸ்ட் 14ஆம் திகதி, கொழும்பு 02இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் புதிய பொலிஸ் மா அதிபராக சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். 37ஆவது பொலிஸ் மா அதிபராக அவருடைய நியமனம், இலங்கைப் பொலிசிற்கான ஒரு சிறப்பான மைல்கல்லாகவே கருதப்படுகிறது. அதன் காரணம், இலங்கைப் பொலிசில் ஆட்சேர்ப்பு செய்யும் மூன்று நிலைகளிலும் இணைந்து பயிற்சி பெற்ற ஒரே அதிகாரியாக இருப்பதோடு, பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை ஆகும். 1969 பெப்ரவரி 09ஆம் திகதி பிறந்த பிரியந்த லியன் ஆரச்சிகே சமன் பிரியந்த அவர்கள், தொடாங்கொடை நேஹின்ன முதல்நிலைப் பாடசாலையில் தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை களுத்துறை ஞானோதயம் மகா வித்தியாலயத்தில் கற்றுக்கொண்டார். கல்விக் கற்கும் போதே இலங்கைப் பொலிஸ் துறையை தனது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுத்து, 1988 மே 20 ஆம் திகதி கனிஷ்டப் பொலிஸ் பதவியில் பொலிஸ் சேவையில் சேர்ந்தார். மேலும், 1990ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திற்குத் தகுதிப்பெற்றார். 1992 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் நேரடி ஆட்சேர்ப்பில் பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்தார். பொலிஸ் சேவையில் இருந்தபோதே, 1993 ஆம் ஆண்டு சட்டப் பீடத்தில் சட்டப் பட்டப்படிப்பை ஆரம்பித்து, 1998 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார். 1999 ஆம் ஆண்டு தனது சட்டப் பட்டப்படிப்பை அடிப்படையாகக் கொண்டு, பயிலுநர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நேரடியாக பொலிஸ் சேவையில் இணைந்து, அடிப்படை பயிற்சியின்போது கௌரவ உயர் நீதிமன்றத்தில் பிரசித்த நொத்தாரிசாக, சத்தியப்பிரமாண ஆணையராக, மற்றும் சட்டத்தரணியாகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராகவும், 2012ஆம் ஆண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும், 2016 ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், 2020ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். திரு. பிரியந்த வீரசூரிய அவர்களின் 37 வருட சேவையில், பல செயல்பாட்டு பிரிவுகளில் பணிப்பாளராகவும், பிராந்திய மற்றும் மாகாணங்களுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். நிர்வாகக் கடமைகளிலும் மேலதிக பொறுப்புகளிலும் திறமைசாலியாகவும் அனுபவமிக்கவராகவும் திகழ்கிறார். 2024 செப்டெம்பர் 27ஆம் திகதி, பதில் பொலிஸ் மா அதிபராக அரசியலமைப்புச் சபையின் அனுமதியுடன் கௌரவ ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டார். பொலிஸ் சேவையின் பல்வேறு தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, பல திட்டங்களை தீவிரமாகச் செயல்படுத்தியுள்ளார். அதன் விளைவாக, பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சீருடைகள், விளையாட்டு சீருடைகள், பாதணிகள், மற்றும் விசேட கடமைக்கான படுக்கைப் பொருட்கள் போன்றவை வழங்குவதற்கான முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபராகச் செயல்பட்ட காலத்தில், சர்வதேச பொலிசாருடன் இராஜதந்திர மட்டத்தில் நற்பிரதி பேணியதுடன், வெளிநாடுகளில் குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கனிஷ்ட மற்றும் பரிசோதகர் நிலைகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள், பதவி உயர்வுகளில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வுகள் என்பவற்றையும் அவர் முன்னெடுத்துள்ளார். மேலும்: • பொது மக்களுக்கான உதவிச் சேவைகள் • பொது மக்கள் குறைகேள் தினங்களை நடாத்தல் • Whatsapp இலக்கத்தை அறிமுகப்படுத்தல் • Gopay திட்டம் • மாகாண அளவிலான குற்ற விசாரணைப் பிரிவுகள் • பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைத்தர மேம்பாடுகள் என்றவையும் செயல்படுத்தியமை சிறப்பம்சமாகும்.  மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளை முறையாக கண்காணித்து பலவீனமான உத்தியோகத்தர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஊழல் செய்யும் உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காகவும் பொலிஸ் துறையினை மேம்படுத்துவதும் இவரின் நீண்டகால திட்டமாகும். அதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுக்கமைய எளிய தீர்வுகளுக்குப் பதிலாக திருமணமான பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்களை அதிகரிப்பதற்காகவும் புதிய குடியிருப்புகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நீண்டகால தீர்வினை பெற்றது சிறப்பான பணியாக கருதப்படுகின்றது.  பிரியந்த வீரசூரிய அவர்கள் ஐக்கிய அமெரிக்காவில் உத்தியோகத்தர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பாடநெறியும், பங்காளதேஷில் நீண்ட தூர பாதுகாப்பு பயிற்சிப் பாடநெறியும், வியட்நாம் மற்றும் அவுஸ்திரேலியாவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவ பயிற்சியும் தாய்லாந்தில் முகாமைத்துவம் மற்றும் நிருவாகப் பயிற்சியும், மலேசியாவில் செயல்முறைப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் தொடர்பான பாடநெறியும், ரஷ்யாவில் பாதுகாப்பு தொழிநுட்பம் தொடர்பான பயிற்சி நெறியும், அமெரிக்காவில் White Collar Crime தொடர்பான பயிற்சி நெறியும், றோயல் மலேசியா பொலிசில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தலைமைத்துவ பாடநெறிகள் உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சி பாடநெறிகளையும் அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.  மேலும், 2008 இலிருந்து 2011 வரை கிழக்கு திமோர் மற்றும் ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் நடவடிக்கைகளுக்கு தனது பங்களிப்பினையும் வழங்கியுள்ளார்.  இலங்கை பொலிசில் பல்வேறு பதவிகளில் தனது கடமையினை வகித்தது  மாத்திரமின்றி உண்மையாகவும் நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய திறமையான உத்தியோகத்தரான சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் இந்நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Scroll to Top