Notable Services – TA – Page 2 – SRI LANKA POLICE

Notable Services – TA

Notable Services - TA

மாத்தளை பொலிஸ் பிரிவிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்காக செயற்கைக் கால்கள் தானமாக வழங்கப்பட்டன

159வது தேசிய பொலிஸ் தினத்தினை முன்னிட்டு, மாத்தளை பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பு பிரிவினால், சமூகத்தை மையமாகக் கொண்ட ஒரு தொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, மாத்தளை பொலிஸ் பிரிவிற்குள் அடங்கிய பிரதேசங்களில் வாழும், முழங்காலுக்கு கீழாக இரு கால்களையும் இழந்தும் ஆதரவின்றி வாழும் II மாற்றுத்திறனாளிகள் சுயமாக அங்கம் இயக்கக்கூடிய செயற்கைக் கால்கள் பெறுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்த உதவிகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, மாத்தளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.கே. விக்கிரமநாயக அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி, மாத்தளை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில், மாத்தளை மாவட்டம் II உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.சி.ஆர். தென்னகோன், சமூக பொலிஸ் ஒருங்கிணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த விஜேபண்டார, மற்றும் பல பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு, விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர். இத்திட்டத்திற்காக, ரூபாய் 6 இலட்சம்  நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளன.  மேலும், இந்த செயற்கைக் கால்கள் வழங்கும் திட்டத்திற்கு சமூக ஆதரவை வழங்கிய கண்டி போ ஹென்டிகெப் நிறுவனம் சார்பாக, அதன் பிரதான கட்டளை அதிகாரி எஸ்.எஸ். அத்தநாயக மற்றும் பிரதான தொழில்நுட்ப அதிகாரி சிசிர குமார ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வுகள், பொலிஸாரின் சமூகப்பணிக்கு எதிரொலியாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Notable Services - TA

திஸ்ஸ வாவியில் அழகை பாதுகாப் போம்.

நாடளாவிய ரீதியில், அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்கள் திஸ்ஸ வாவியை பார்வையிட்டு அதில் நீராடுவதை பெரிதும் விரும்புகின்றனர். இருப்பினும், விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்துவரப்பட்டபோதிலும், வாவியின் வளாகத்திற்கு வருபவர்கள் குப்பைகளை ஏரிக்குள் வீசும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால், திஸ்ஸ வாவி சுற்றுவட்டாரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், வாவி வளாகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை முறையாக அகற்றும் சிரமதானம் 2025 செப்டம்பர் 20 அன்று அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு திலிண ஹேவா பத்திரன அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த சிரமதான செயற்பாடு, அனுராதபுரம் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், அப்பிரிவின் கீழ் பயிற்சி பெறும் பாடசாலை மாணவர்கள் மற்றும் திஸ்ஸ வாவி பகுதியில் உள்ள நடமாடும் விற்பனையாளர்கள் தங்களது விருப்பத்துடன் இதில் பங்கேற்று ஆதரவு வழங்கினர்.

Notable Services - TA

“109 க்கு அழையுங்கள்” உங்களைத் தெளிவுப்படுத்த எங்களின் நடைப்பயணம்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  போன்று அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்வதற்காக சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு விசாரணைப் பணியகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு இலக்கம் “109” தொடர்பாக பொது மக்கள் அவதானத்தை செலுத்தும் நோக்கில், சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு விசாரணைப் பணியகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நடைப்பயணமானது 19.07.2025 ஆந் திகதி மாலை வேளையில் கொழும்பு ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது. சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திருமதி. ரேணுகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அப் பணியகத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமா ஹேவா அவர்களும்,  கம்பஹா, களனி, மத்திய கொழும்பு, கொழும்பு தெற்கு, பாணந்துறை, எல்பிட்டி, காலி, மாதறை, தங்கல்லை மற்றும் குளியாபிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகங்களில் கடமையாற்றும் 350 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.  நடைப்பயணமானது ஆமர்வீதியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்திற்கு அருகாமையில் மாலை 2.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மருதானை ஊடாக கொழும்புக் கோட்டை புகையிரத நிலையம் முன்பாகவும், காலி முகத்திடல் வரை சென்றதுடன் “109” விசேட செயற்பாட்டு அறை தொடர்பாகவும் மற்றும் சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் துண்டுபிரசுரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், காட்சிகள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, வீதி நாடகங்கள் மற்றும் காலி முகத்திடலில் நடாத்தப்பட்ட விஷேட நிகழ்ச்சிகளினூடாக பொது மக்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

Notable Services - TA

கொழும்பு போக்குவரத்து தலைமையகத்தின் உத்தியோகத்தர்கள் இம்முறை கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு வருகை

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு. மனோஜ் ரனகல அவர்களின் தலைமையில் 11.07.2025 அன்று கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர்களுக்கு போக்குவரத்துச் சட்டம் மற்றும் வீதிகளில் பாதுகாப்பாக பயணிப்பது தொடர்பான தெளிவூட்டல்கள்  நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் போக்குவர்த்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டனர். போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக நிபுணத்துவம் கொண்ட விரிவுரையாளரான கல்வியற் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரவீன் சுமனரத்ன அவர்களும் ஓட்டுநர் பாடசாலையின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தயால் காரியவசம் ஆகியோரால் ஆனந்த கல்லூரி பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்ட விரிவுரைகள் மற்றும் வீதி  காட்சிகள், நடைமுறை செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வானது காலை முதல் மாலை  வரை சுமார் 05 மணித்தியாலங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் லால் திசாநாயக அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு 3000 இற்கும் மேற்பட்ட பாடசாலை  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றினர்.  பாடசாலைக்கு வருகைத்தரும் மாணவர்கள் ஒவ்வொருவரும் காலையில் ஆனந்த கல்லூரிக்கு முன்னால் வாகனங்களை செலுத்து முறைமை தொடர்பாக மாணவர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதோடு, மோட்டார் சைக்கிளில் வரும் மாணவர்கள் பாதுகாப்புக்கான தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும், வீதியை கடக்கும் போது பாதசாரிகளின் முக்கியத்துவத்தையும் விரிவாக மற்றும் தெளிவாக எடுத்துரைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுக்காக Fairfirst Insurance  என்ற தனியார் நிறுவனம் அனுசரணை வழங்கியதுடன், சொற்பொழிவின்போது போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் எழுப்பிய வினாக்களுக்கு சரியான பதில்கள் வழங்கிய ஆனந்த கல்லூரியின் மாணவர்களுக்கு போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்களால் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.

Notable Services - TA

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு.

எசல பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு 10.07.2025 ஆந் திகதி காலை வேளையில் பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் பௌத்த சமய நிகழ்வுகள் இடம்பெற்றது. சமய நிகழ்வானது பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் சந்திரசேன அவர்களின் தலைமையிலும், பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பெண் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி அவர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து பௌத்த சமய நிகழ்வை ஏற்பாடு செய்தனர். இந் நிகழ்வின் போது பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கிவைக்கப்பட்டது.  

Notable Services - TA

ரூபாய் 5 இலட்சம் பெறுமதியான நன்கொடை கொக்கல்ல மகா வித்தியாலயத்திற்கு

The Library Association of Sri Lanka Police visited Koggalla Maha Vidyalaya in the Ambalantota Police area of the Tangalle Police Division on 04.07.2025 to fulfill the needs of its library. Every police officer currently in service contributes a small portion of their salary each month to the Library Association. From these contributions, funds are allocated to enhance library facilities at all police divisions across the island and to support various charitable initiatives. This charitable activity, organized under the coordination of the Police Sergeant Jeevan Sampath of the Executive Committee of the Library Association, was successfully carried out with the intervention of the Senior Superintendent of Police in charge of the Tangalle Division, Mr. Upula Seneviratne. Accordingly, a donation of books, stationery, and educational materials valued at over 500000 rupees was made to Koggalla Maha Vidyalaya. Superintendent of Police, Mr. Jayatissa, the Vice President of the Library Association, the Executive Members of the Library Association, the Officer in Charge of the Ambalantota Police Station and other officers participated in this event. Along with this, the Prefects Investiture Ceremony was also held, and the keynote speech of the occasion was made by the Sub Inspector of Police, Mr. Abeysinghe of the Police Media Division, who is known as an eloquent speaker and announcer.

Scroll to Top