covi 1ops roommedia

2019 மூத்த வீரர்களுக்கான நீண்ட தூர நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவிற்கான வெற்றி இலங்கை பொலிஸ் அணியினருக்கு..

இலங்கை நீர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‟2019 மூத்த வீரர்களுக்கான நீண்ட தூர நீச்சல் போட்டி” 2019 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பு சென் ஜோசப் வித்தியாலய நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

இப் போட்டிகளுக்காக இலங்கை முழுவதிலுமிருந்து 58 நீச்சல் கழகங்களைச் சேர்ந்த 183 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றதுடன் இலங்கை பொலிசை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக 76 நீச்சல் வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். இப் போட்டிகளில் 515 புள்ளிகளை பெற்ற இலங்கை பொலிஸ் அணியினர் ஒட்டு மொத்த ஆண்களுக்கான பிரிவின் முதலாவது இடத்தை பிடித்து வெற்றியினை தனதாக்கி கொண்டதுடன், பெண்கள் அணியினர் 75 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்று இலங்கை பொலிசுக்கு பெருமையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

மேலும், 45 - 49 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 4091 ஆர்.எம்,சி குணவர்தன அப் பிரிவில் சிறந்த பெண் விளையாட்டு வீரரங்கனையாகவும், 45 - 49 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட பொலிஸ் பரிசோதகர் கே.டி.எச். விஜயந்த அப் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராகவும், 55 - 59 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட உப பொலிஸ் பரிசோதகர் பி.டீ குருகே அப் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராகவும் தெரிவாகி பதங்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

  2019 மூத்த வீரர்களுக்கான நீண்ட தூர நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவிற்கான வெற்றி  இலங்கை பொலிஸ் அணியினருக்கு..