covi 1ops roommedia

curfew pass 1

இலங்கை பொலிஸாரினால் சுபவேளையில் புது வருடத்திற்கான கடமையை ஆரம்பித்தல்.

2020 புது வருடத்திற்கான தமது கடமைகளை ஆரம்பிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் திரு. சீ.டீ. விக்கிரமரத்ன உள்ளடங்களாக பொலிஸ் தலைமையகத்தில் சகல பிரிவுகளின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்ட அரச சேவை சத்தியப்பிரமான நிகழ்வு இன்று (01.01.2020) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் போது தனது உரையை நிகழ்த்திய பொலிஸ் மா அதிபர் அனைத்து தரத்திலுமான பொலிஸ் உத்தயோகத்தர்களுக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்ததோடு கடந்த வருடத்தில் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாத்தமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மேற்கொண்ட சிறந்த சேவையை பாராட்டினார்.

மேலும், நிகழ்வில் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட காலை விருந்து உபசாரத்தில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டதோடு இவ் வைபவத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான திரு. எம்.ஆர்.லதீப், திரு.தேசபந்து தென்னகோன், பத்மஶ்ரீ முணசிங்க , சிவில் நிர்வாகப் பணிப்பாளர் வஜிர குணவர்த்தன உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.