covi 1ops roommedia

curfew pass 1

இலங்கை பொலிஸ் கால் பந்தாட்ட அணியினர் வென்டேஜ் FA CUP 2019/2020 போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட FA CUP 2019/2020 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை பொலிஸ் அணியினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அணிகளுக்கிடையேயான போட்டி 2020.01.11 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடை பெற்றது.

இப் போட்டியில் 05 - 02 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியினை ஈட்டிய இலங்கை பொலிஸ் அணியினர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன் போட்டியின் சிறந்த வீரருக்கான கிண்ணத்தை பொலிஸ் அணியின் சதுர குணரத்ன பெற்றுக் கொண்டார்.