Menu

லியன அத்துகோரலலாகே தொண் நிரோஷன் சமீர

தொலைபேசி அழைப்புகள் ஊடாக அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக சமூகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுடன் தொடர்புகளைப் பேணி பரிசுப் பொதிகள் வழங்குவதாக கூறி அப் பரிசில்களை பெற்றுக்கொள்வற்கு அவர்களிடமிருந்து வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடப்பட்டு பண மோசடிகளில் ஈடுபட்டதுடன், சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்கை பயன்படுத்தியமை தொடர்பிலும், பெறப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகவல்கள் தொடர்பாகவும் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணை – 02 அலகின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் நீதிமன்றின் உத்தரவை மீறி பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் மறைந்திருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்தால் அல்லது கைது செய்வதற்காக உதவக்கூடிய தகவல் அறிந்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும்.

சந்தேகநபர் –

பெயர் – லியன அத்துகோரலலாகே தொண் நிரோஷன் சமீர
தே.அ.அ – 780232196 v
விலாசம் – இஹல போமிரிய, கடுவலை

தொலைபேசி இலக்கம் –

பொறுப்பதிகாரி நிதி விசாரணை அலகு (02) – 071 – 8594911
குற்றவியல் விசாரணைத் திணைக்களம் – 011 – 2320140

Scroll to Top