சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகும் ஏதேனும் கடுமையான குற்றங்கள் அல்லது முறைப்பாடுகளை உடனடியாக நிவர்த்திசெய்வதற்காக தங்களிடமுள்ள திறனை மேலும் மேம்படுத்துவதற்காக குருவிட்ட பொலிஸ் நிலைய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாணக் குற்ற விசாரணை பிரிவானது பதில் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையின் கீழ் 19.07.2025 ஆந் திகதி மாலை வேளையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் மாஅதிபருடன் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த குணரத்ன அவர்களும் இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள மஹகிரில்ல அவர்களும் இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸ அவர்கள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.