Menu

மேல்மாகாணம் மற்றும் அதிவேக வீதிகளில் GovPay இன் ஊடாக தண்ட பணத்தை செலுத்த முடியும்.

2011 ஆண்டிலிருந்து தண்டப்பணம் செலுத்தப்படும் முறைமையை புதிய பரிமானத்துடன் செயற்படுத்தும் முயற்சிகளின் பலனாக Digital payment System திட்டமானது வெற்றிகரமாக பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளும் இதில் இணைந்துள்ளது.

முதற்கட்டமாக அநுராதபுரம், கவரக்குளம், திரப்பனை, மரதன்கடவள, கெகிராவை, மடாட்டுகம, குருநாகல், கொக்கரெல்ல, மெல்சிரிபுர, தொரட்டியாவ, தம்புள்ளை, கலேவெல ஆகிய 12 பொலிஸ் நிலையங்களில் கைத்தொலைபேசிகளை உபயோகித்து இத் திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக Digital payment System என்ற திட்டமானது வெற்றியடைந்துள்ளது.

பொலிசார் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மேலும் இத் திட்டத்தை விரிவுப்படுதி மேல் மாகாணங்கள் மற்றும் அதிவேக வீதிகளில் இடம்பெறும் சகல போக்குவரத்து குற்றங்கள் GovPay ஊடாக தண்டப்பணத்தை செலுத்துவதற்கான வசதிகள் 28.07.2025 ஆந் திகதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் ரத்நாயக்க அவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஐயபால அவர்களின் தலைமையில் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடன் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு அறிமுகப்படுள்ளது.  

இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்காக படிப் படியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும், பொதுமக்களிடம் தெளிவுப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து குற்றங்கள் மற்றும் விபத்துகளை தடுப்பதற்கு மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் வழங்குவதை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Digital payment System திட்டமானது எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Scroll to Top