இலங்கை பொலிசின் நிருவாக திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு இணையாக அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப் பிரிவுகளை வலுவூட்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெஹெர பொலிஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண குற்றப் பிரிவு 03.08.2025 ஆந் திகதியன்று கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களின் தலைமையில், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் பணியாக புத்தளம், குருநாகல், குளியாபிட்டி மற்றும் நிக்கவெரட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் குற்றங்களை ஏற்படுத்தும் கும்பல்களை கட்டுப்படுத்தல், சட்ட விரோத போதைப் பொருள் வலையமைப்பை முடக்குவதனூடாக போதைப் பொருள்களை கடத்தல்களை ஒழித்தல் மற்றும் சகல குற்றங்களை இல்லாதொழிப்பது மாத்திரமின்றி அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட விசாரணைக் குழுக்களின் ஊடாக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
இந் நிகழ்வில் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. அஜித் ரோஹண அவர்களும், வடமேல் மாகாணப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சரத்குமார அவர்கள் மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.