எசல பௌர்ணமி போயா தினத்தை முன்னிட்டு 10.07.2025 ஆந் திகதி காலை வேளையில் பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் பௌத்த சமய நிகழ்வுகள் இடம்பெற்றது.
சமய நிகழ்வானது பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் சந்திரசேன அவர்களின் தலைமையிலும், பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பெண் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி அவர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து பௌத்த சமய நிகழ்வை ஏற்பாடு செய்தனர். இந் நிகழ்வின் போது பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கிவைக்கப்பட்டது.