இலங்கையின் புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி மாலை, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி புதிய பொலிஸ்மா அதிபருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இச்சந்திப்பு நினைவாகும் வகையில், பொலிஸ்மா அதிபரால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டதுடன், மரியாதையும் செலுத்தப்பட்டது.
மேலும், சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.