இலங்கை பொலிஸ் சேமிப்பு சங்கத்தின் 98ஆவது பொதுக்கூட்டம், 2025 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பகல், கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
1924ஆம் ஆண்டு, அப்போதைய பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட ஜே.டி. எயிட்கன் அவர்களின் முனைப்பில் தொடங்கப்பட்ட இந்த சங்கம், பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நோக்கம் இன்றும் தொடர்ந்தே நிலைத்து நிற்கின்றது.
பொதுக்கூட்டத்தில், சங்க நிர்வாகக் குழுவின் தலைவர் மற்றும் உதவிச் சேவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ராஜித்த ஶ்ரீ தமிந்த, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, சங்கத்தின் யாப்பு அடிப்படையில் முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கான புதிய நியமன யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், பொலிஸ்மா அதிபர் சங்கத்தின் தலைவராகத் தொடர்வதற்கு நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.