பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025 ஆகஸ்ட 22 ஆம் திகதி மாலை வேளையில் பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களையும் மற்றும் பிரதமரின் செயலாளர் ஜீ.பீ.சபுதந்திரி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு பிரதமர் மற்றும் செயலாளர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், இம் முக்கிய சந்திப்பை நினைவு கூர்ந்த வகையில், பொலிஸ்மா அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.