Menu

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட ஐந்து முக்கிய சந்தேக நபர்களை இந் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் வெளிநாடொன்றில் ஒரே நேரத்தில் மிக முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதற்காக இலங்கை பொலிசார் சர்வதேச பொலிஸ் உதவியுடன் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.  இதன் போது இந்தோநேசியா நாட்டிற்குத் தப்பிச் சென்று மறைந்திருந்த சந்தேகநபர்களை 2025.08.27 ஆம் திகதியன்று இலங்கை பொலிசார் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர். 

இந் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், பானந்துறே நிலந்த மற்றும் தெம்பிலி லஹிரு  போன்ற புனைப்பெயர்களால் அறியப்படும் சந்தேக நபர்களை 30.08.2025 ஆம் திகதி இரவு, விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சுற்றிவளைப்புகளின் ஆரம்பம் முதல் இறுதி வரை தீவிரமாக செயல்பட்டு மன உறுதியுடன் கடமையை மேற் கொண்ட இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு இறுதிவரை உறுதியான ஆதரவை வழங்கியது மாத்திரமின்றி சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக இந் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு உதவிப் புரிந்த இந்தோநேசியா பொலிஸ் உத்தியோகத்தர்களையும் வரவேற்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களும், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களும் விமானம் தரை இறங்கும் வரை விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தனர். 

பொலிஸ்மா அதிபர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் சந்தேக நபர்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், தீவர பாதுகாப்பிற்கு மத்தியில் அவர்களை விசாரணை பிரிவுகளுக்கு ஒப்படைக்கும் வரை தடுத்துவைப்பதற்கு கட்டளையிட்டது மாத்திரமின்றி  அவர்களுக்கு சட்டரீதியான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். 

Scroll to Top