பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக, வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “சன்செட்” விடுமுறை விடுதி, 2025.09.01 ஆம் திகதி மாலை, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் கரங்களால் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்விடுதி, மன்னார் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பொறியியலாளர் பிரிவின் உத்தியோகத்தர்களின் பங்களிப்பின் கீழ், முழுமையாக நிர்மாணிக்கப்பட்டது. இதற்கான நிதி உதவி, அந்த பிரிவிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டது.
விடுதி திறப்பு நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு திலக்.சி.ஏ. தனபால, வன்னி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜேசேகர, மன்னார் பிரிவிற்கும் (கடமை மேற்கொள்ளும்) திருக்கோணமலை பொலிஸ் பிரிவிற்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ. சந்திரபால அவர்கள் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கெலும் தர்ஷன செனவிரத்ன ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ்விடுதி, பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன் மற்றும் ஓய்வூட்டும் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.