மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடகம சந்திக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹோமாகம புதிய சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவகம், 2025 செப்தம்பர் 03ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல அவர்களின் தலைமையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனவிரத்ன, மற்றும் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவகம், கொட்டாவை, ஹோமாகம, மீகொட, அத்துருகிரிய, நவகமுவ, கடுவெல, பாதுக்க, ஹங்வெல்ல மற்றும் கொஸ்கம ஆகிய ஒன்பது பொலிஸ் நிலையங்களுக்கும் முகாமைத்துவம் வழங்கும் ஒரு முக்கிய நிர்வாக மையமாக செயல்படவுள்ளது.
தற்போது ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு. C.D. லியனகே அவர்கள் கடமையாற்றுவார் என்பதுடன், மக்கள் சார்ந்த, திறமையான மற்றும் பயனுள்ள பொலிஸ் சேவையை வழங்கும் நோக்கில், இவ்வலுவகம் முழுமையாக இயங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கான இலக்கம்: 071 – 8592113
இவ்விழாவில், பொலிஸ்மா அதிபருடன் இணைந்து, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாண தெற்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. பிரதீப் கலுபஹன,
உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.