விஷப் போதைப் பொருள் பரவிவருவதை இந்நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்கும் நோக்கத்துடன் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக அவர்களின் அறிவுறுத்தலின் படி ஆரம்பிக்கப்பட்ட “அகன்று செல்” முழு நாடுமே ஒன்றான தேசிய செயற்பாட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 செப்டம்பர் 2025 ஆம் திகதி மாலை வேளையில் தங்காலை பொது விளையாட்டரங்கில் அனைவரையும் ஒன்றினைத்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட இச் சந்திப்பானது விசேட அம்சமாக ஒன்றான தென் மாகாணத்தினுள் வெற்றிகரமாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களால் பெருமளவிலான போதைப் பொருள்களை கைப்பற்றியது மாத்திரமின்றி, சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் ஆயுதங்கள், அதன் தோட்டாக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதுடன் அதற்கு தொடர்புடைய சந்தேகநபர்களையும் கைதுசெய்வதற்கு முடிந்துள்ளது.
பாரதூரமான குற்றங்களை மிகவும் திறமையான முறையில் கையாண்டு அவற்றை தீர்த்து வைத்து கௌரவமான பொலிஸ் சேவையை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களையும் பாராட்டி அவர்களுக்கும் பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்புப் படையணியின் புலனாய்வாளர்களாக தகவல்களை வழங்கிய உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாத போதும் அவர்களுக்கும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த காலங்களில் தெற்கு கடற்கரையில் பெருந்தொகையான போதைப் பொருள்கள், ஆயுதங்களும் அதன் தோட்டாக்களுடன் சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு முடிந்ததன் காரணமாக கௌரவ ஜனாதிபதி அவர்களால் கடற்படை உத்தியோகத்தர்களுக்கும் பரிசில்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், 13.04.2025 ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகாமையில் 53 கிலோ 300 கிராம் எடையைக் கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 60 கிலோ 660 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப் பொருளுடன் லொரியுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
04.04.2018 ஆம் திகதி கொஸ்கொடை இரட்டைக் கொலையில் சந்தேகநபர்களை டி–56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டனர்.
06.08.2025 ஆம் திகதி விரகெட்டிய ஹன்புன்ன பிரதேசத்தில் டி–56 ரக துப்பாக்கியும் 30 தோட்டாக்களும் கைப்பற்றியமை.
05 ஜூலை 2020 ஹினிதும பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெண் ஒருவர் காணாமல் போன விவகாரத்தை மனிதப்படுகொலை என்பதை கண்டறிந்தமையும் அதற்குத் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்தமை.
30.06.2025 ஆம் திகதி மாத்தறை மற்றும் தெய்யந்தறை பிரதேசத்தில் AK–47 செயற்பாட்டுத் துப்பாக்கியும் கைத் துப்பாக்கியும் 12080 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
எவ்வாறாயினும் இதற்கு தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிசில்களை பெற்றவர்கள் வெற்றிகரமாக கைதுகளின் சில ஆகும்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பானது குறிப்பிட்ட காலங்களில் மேலும் வெற்றிகரமாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, அதன் தலைமைத்துவத்தை வழங்குதல் போன்று தகவல்களை வழங்குவதற்கு முன்னின்றுச் செயற்பட்டு அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பொறுப்பு கோரும் அனைவரும் தனது தாய்நாட்டுக்காக உறுதிமொழியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிக்குமார்கள் மற்றும் ஏனைய மதக் குருமார்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரயந்த வீரசூரிய அவர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவினர்கள், பிரதேச பொதுமக்களின் கலந்துகொள்வதோடு இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.