இலங்கையுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சீன கவுன்சில் ஊடாக, இலங்கை பொலிஸ் துறையினரால் மேற்கொள்ளப்படும் நிவாரண விநியோகத் திட்டங்களுக்காக, ரூ. 02 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை நன்கொடையாக வழங்கியது.
நன்கொடை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வானது 2025.12.03 அன்று காலை பொலிஸ் விசேட அதிரடிப் படைத் தலைமையகத்தில், சபையின் தலைவர் Zhang Xudong அவர்கள் தலைமையில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி, பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
சீன கவுன்சில் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெனரல் டி.ஜி. சமந்தா டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.