Menu

உயிர்காக்கும் திறன்களைப் பெற பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ் உயிர்காக்கும் படையினரை சந்தித்தனர்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப பீட மாணவர்களின் வேண்டுகோளின்பேரில், பொலிஸ் கடற்படைப் பிரிவின் பாணந்துறை உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் ஒருநாள் உயிர்காக்கும் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்தனர்.

இப்பயிற்சி நிகழ்வு 2025 நவம்பர் 9 ஆம் தேதி பாணந்துறை கடற்கரையில் நடைபெற்றது.

சுமார் 70 மாணவர் – மாணவியர் கலந்து கொண்ட இப்பயிற்சியில், நீரில் மூழ்குதல் அல்லது நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழல்களில் உயிர்களை பாதுகாப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், விரிவுரைகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் பலவும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப பீடத்தின் தலைவர் மொனாரா வீரகோன் மற்றும் துணைத் தலைவர் மதுன் தில்ஹாரா ஆகியோரும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நிகழ்ச்சியை உப பொலிஸ் பரிசோதகர் நிமல் சிறி, பொலிஸ் சார்ஜென்ட் 35491 சுமித், பொலிஸ் சார்ஜென்ட் 50342 ஞானரத்ன, பொலிஸ் கான்ஸ்டபிள் 33628 லக்மால், பொலிஸ் கான்ஸ்டபிள் 101557 தனுகா, மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 91046 தசுன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Scroll to Top