Menu

பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொழும்பு மத்திய பிரிவு ஆற்றும் மனமார்ந்த சேவை.

சீரற்ற காலநிலை மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் தங்கள் மனிதாபிமான பொறுப்பின் ஒரு பகுதியை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். 

கொழும்பு மத்திய பிரிவிற்குப் பொறுப்பதிகாரியான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க அவர்களின் தலைமையில், அப் பிரிவைச் சேர்ந்த எட்டு பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட நன்கொடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் சேகரித்துள்ளனர்.

உலர் உணவு உள்ளிட்ட இந்த நிவாரணப் பொருட்கள் 02 டிசம்பர் 2025 காலை, பொலிஸ் வாகனங்களில் ஏற்றி, மத்திய மாகாணத்தின் கொத்மலைப் பகுதியிலுள்ள  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக ரத்மலானை விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பேரிடரால் பாதிக்கப்பட்ட சக குடிமக்களுக்கு ஆதரவாக வெகு நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ள இந் நடவடிக்கை பொலிஸ்துறையின் மனிதாபிமான கடமையையும் சமூகத்திற்கு அளிக்கும் பெரும் ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது.

கொழும்பு மத்திய பிரிவு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த ஆறுதலை வழங்கவும், நாட்டின் மறுகட்டமைப்பு முயற்சிகளில் தொடர்ந்து முன்னணியில் பங்காற்றவும் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top