Menu

போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இப்பாகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் – பணத் தூயதாக்கலுக் கெதிரான சட்டத்தின் கீழ் விசாரணை.

இப்பாகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய போதைப் பொருள் கடத்தல்காரர், போதைப் பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்வரும் சொத்துக்கள் தொடர்பாக பணம் தூய்மைப்படுத்தலுக்கெதிரான சட்டத்தின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதற்கமைய, 10.12.2025 ஆம் திகதியிலிருந்து 07 நாட்கள் சொத்துக்கள் முடக்குவதற்கான கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்கள்:

• ரூ. 5,400,000 பெறுமதியான கெப் வாகனம்

• ரூ. 14,500,000 பெறுமதியான வேன்

• ரூ. 4,566,805.30 பணம் — குருநாகல் தனியார் வங்கி கணக்கு

• ரூ. 35,956,514.66 பணம் — குருநாகல் தனியார் வங்கி கணக்கு

• ரூ. 12,623,628.81 பணம் — இப்பாகமுவை தனியார் வங்கி கணக்கு

• ரூ. 19,883,810.81 பணம் — குருநாகல் தனியார் வங்கி கணக்கு

• ரூ. 118.31 பணம் — குருநாகல் தனியார் வங்கி கணக்கு

• குருநாகல் தனியார் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள 544.66 அமெரிக்க டொலர் (வெளிநாட்டுப் பணம்)

பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு குருநாகல் கௌரவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேகநபரால் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட ரூ. 283,300,000/- (இருபத்தெட்டு கோடியே முப்பத்து மூன்று இலட்சம் ரூபாய்) பணம் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மொத்த பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட பணம்: ரூ. 376,230,877.31 (முப்பத்தேழு கோடியே அறுபத்து இரண்டு இலட்சத்து முப்பாதாயிரத்து எழுபத்தேழு ரூபாய், முப்பத்தொரு சதம்)

சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் முடக்க, பொலிஸ்மா அதிபர் அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 
Scroll to Top