திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கல்வி பெறுவதற்கு உதவி தேவைப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் புத்தகங்களை வழங்கும் சமூக சேவை நிகழ்வு , பொலிஸ் சேவா வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் 24.12.2025 அன்று திருகோணமலை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
பொலிஸ் சேவா வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி நில்மினி நிதா சமரதுங்க அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமூக சேவைத் திட்டங்களின் மற்றொரு கட்டமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இதில் குழந்தைகளுக்காக 1000 புத்தகத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.
இப் புத்தக விநியோகத்திற்கான முழுமையான அனுசரணையை வாத்துவ சமுத்திராராம விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கம்மன விஜய தம்ம தேரர் தலைமையிலான இளைஞர் குழுவினர் வழங்கியிருந்தனர்.
அவர்களின் பங்கேற்புடன், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அவர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க அவர்கள், திருகோணமலை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால் உள்ளிட்ட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் பொறுப்பதிகாரியான பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமாலி பொன்சேகா அவர்களும், சேவா வனிதையர் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி பத்மினி ஜயவீர அவர்களும் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.