2026 புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும், அனைத்து பொதுமக்களான உங்களின் நலனுக்கும் பிரார்த்தித்தவாறு, 2025 டிசம்பர் 30 ஆம் திகதி, பொலிஸ் தலைமையகத்தில் முழு இரவு பௌத்த பூஜைகள் நடைபெற்றது.
லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு யானை ஊர்வலம் மற்றும் பொலிஸ் கலாச்சாரப் பிரிவின் சங்கீத நடனங்களைக் கொண்ட அழகிய பெரஹெர ஊர்வலம், பௌத்த தேரர்களின் விசேட பூஜையுடன் தொடங்கியது.
அனைத்து நடவடிக்கைகளும், பொலிஸ்மா தலைவர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையிலும், இலங்கை பொலிஸ் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
மேலும், இவ்விழாவிற்கு அழைப்பை ஏற்று வருகை தந்தோர்:
• கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் துணை அமைச்சர் சுனில் வட்டகல அவர்கள்,
• பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அவர்கள்,
• நிர்வாகப் பொறுப்புக்கான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா தலைவர் சஞ்ஜீவ தர்மரத்ன
• சிரேஷ்ட மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் இவ் விசேட பூஜையில் கலந்து கொண்டு ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.