2025 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி, பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வராத்திரி பிரித் பாராயணப் புண்ணிய நிகழ்வின் தொடர்ச்சியாக, அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை, பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில்,
சிரேஷ்ப் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், இருபத்தைந்து தேரர்களுக்கான காலை உணவுத் தானத்தை புனிதமாக அர்ப்பணிக்கும் பொருட்டு, ஹுனுபிட்டிய கங்காராம விகாரத்திற்குப் புனிதமாக வருகை தந்தனர்.
அவ்வேளையில், ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி, பூஜ்ய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அவர்களின் தலைமையிலான மகா சங்கரத்தினர், பொலிஸ்மா தலைவர் உட்பட, இலங்கை பொலிஸ் துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் (ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட), 2025 ஆம் ஆண்டிற்கான சுகநலம், சாந்தி மற்றும் நலவாழ்வை மனமார்ந்த பிரார்த்தனையுடன் வேண்டி ஆசீர்வாதங்களை வழங்கினர்.