Menu

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் “ரூ சிரி” அழகு நிலையம் திறப்பு.

பொலிஸ்மா அதிபரின் மனைவியும், சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான நில்மினி சமரதுங்க மகளிரின் முயற்சியின் அடிப்படையில், முன்னர் கொழும்பு பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்திலும் மற்றும் பாராளுமன்ற வர்த்தக வளாகத்திலும் “ரூ சிரி” என்ற பெயரில் நிறுவப்பட்டிருந்த அழகுக்கூட சேவையை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, அனுராதபுரம் பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அழகுக்கூடம் 2026.02.07 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பொது மக்களை தங்களது பிரச்சினைகளை முன்வைக்க பொலிஸ் நிலையங்களுக்கு வர ஊக்குவிப்பதையும், பொலிஸ் நிலையங்களை பெண்களுக்கு மேலும் நெருக்கமாக மாற்றுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, மிகச் சலுகை விலையில் இந்த அழகுக்கூடத்தின் மூலம் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அழகுக்கலைத் துறையில் திறமை பெற்றுள்ள பொலிஸ் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்க இது உதவுகின்றது.

சேவை வனிதையர் பிரிவு தலைவி சட்டத்தரணி நில்மினி சமரதுங்க அவர்களின் தலைமையில், அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான  சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர்  திலின ஹேவா பதிரண அவர்கள், அனுராதபுரம் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் (I) பிரபாத் விதானகே உள்ளிட்ட அனுராதபுரம் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீர, அனுராதபுரம் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஷ்யாமலி திசாநாயக்க, பொலிஸ் சேவை வனிதையர் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பத்மினி ஜயவீர ஆகியோரின் கலந்துகொள்ளுதலுடன் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

Scroll to Top