Menu

2026 இன்டர்-கிளப் லீக் ரக்பி போட்டியின் பிளேட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டி – பொலிஸ் அணி இரண்டாம் இடம்

இலங்கை ரக்பி கால்பந்து கூட்டமைப்பு 20.02.2026 அன்று இரத்மலானை விமானப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்து நடத்திய “மெலிபன் சேலஞ்ச் கோப்பை” இன்டர்-கிளப் லீக் சாம்பியன்ஷிப் ரக்பி போட்டியின் பிளேட் சாம்பியன்ஷிப்பிற்காக இலங்கை பொலிஸ் ரக்பி அணியும் விமானப்படை ரக்பி அணியும் போட்டியிட்டன.

விமானப்படை அணி பொலிஸ் அணியை 24 க்கு 12 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பிளேட் சாம்பியன்ஷிப்பை வென்றது. அதன்படி, பொலிஸ் அணி போட்டியை இரண்டாம் இடம் பிடித்தது.

பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகோந்தா, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், குற்றம் மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்  ரன்மல் கொடிதுவக்கு மற்றும் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் போட்டியைக் காண மைதானத்தில் கூடியிருந்தனர்.

Scroll to Top