ஊவா மாகாணம் முழுவதும் பரவி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை திட்டத்தின் ஆரம்ப விழா 2026 பெப்ரவரி 14 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், மொனராகலை மாவட்டத்திற்குப் பொறுப்பான தனமல்வில பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனரத்ன அவர்கள், பதுளை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.என். லக்ஸிரி அவர்கள், மொணராகலை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அவர்கள், மொனராகலை மற்றும் பதுளை பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர்கள், தனமல்வில பிரதேச செயலாளர், மாவட்ட மருத்துவ அதிகாரி, மொனராகலைப் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர்கள் மற்றும் சமூகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இச்சிறப்பு நடவடிக்கையின் மூலம் இலங்கை பொலிஸ், ஊவா மாகாண இளைஞர் சமூகத்தை போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாத்து, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தை முற்றிலும் ஒழிக்க எதிர்பார்க்கிறது.