Menu

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவு.

தொலை நோக்கு
வீதி விபத்துகளும் போக்குவரத்து நெரிசலற்ற, பாதுகாப்பான வீதிகளை உருவாக்கல்.

செயற்பணி
அனைவரும் பாதுகாப்பாக வீதிகளில் பயணம் செய்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்காகும், வீதி விபத்துகளுக்கான புள்ளிவிபரங்களை சேகரித்து, அதன்படி போக்குவரத்து சட்டங்களை வடிவமைத்தல், தொடர்புடைய நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து நடவடிக்கை எடுக்குதல் மற்றும் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல், பாடசாலை மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீதி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இதனூடாக நாட்டெங்கிலும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

வரலாறு மற்றும் தற்போதைய முன்னேற்றமும்.

இலங்கையில் முதன் முதலில்  1899 டிசம்பர் 01 ஆம் திகதியன்று ட்டெம்ப் கார் (எரிபொருள் இயங்கும் வாகனம்) பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து 1899   டிசம்பர் 14 அன்று அஞ்சல் வேன் இறக்குமதி செய்யப்பட்டு தபால் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது.  1902 ஆம் ஆண்டு முதன் முறையாக காரும், 1906 ஆம் ஆண்டு பேருந்தும் இந் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்தன் பின்னர்,  போக்குவரத்து கட்டுப்பாட்டு விதிமுறைகளின் அவசியம் ஏற்பட்ட காரணத்தினால்.  

  • 1906 ஜனவர் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.
  • இலங்கையில் 1909 ஆம் ஆண்டில் 745 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. 1911 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 4805 ஆக உயர்ந்தது. வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து தொடர்பான சட்ட விதிமுறைகளின் தேவைப்பாடுகளும் அதிகரித்துள்ளன, அதன் பின்னணியில் 1916 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க வாகன கட்டளைச் சட்டம் உருவாக்கப்பட்டு  1917 ஜனவரி 01 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.  
  • மோட்டார் வாகனம் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்த 1951 ஆண்டிற்கு முன்னர் மோட்டார் வாகன ஒழுங்குமுறைகள் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டங்களை பயன்படுத்தியதுடன், முறைப்படி 1951 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டத்தை நிறைவேற்றி அன்றிலிருந்து இன்றுவரை பல திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

மேலும், 1917 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனம் பதிவுச் செய்யப்படும் அலுவலகமொன்றை ஸ்தாபித்து மோட்டார் வாகனப் பதிவுகளை மேற்கொண்டு வந்தனர். 

 

  • 1920 ஆம் ஆண்டின் போது பிரதான மங்சந்திவலயில் போக்குவரத்து நடைமுறைகளை கையாளுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்  நியமிக்கப்பட்டனர்.
  • 1950 ஆம் ஆண்டில், பொலிஸ் கட்டளை டி – 01 இன் கீழ் போக்குவரத்து அலகு ஒன்று நிறுவப்பட்டு, அதனூடாக கொழும்பு நகரில் போக்குவரத்து முகாமைத்தும் மேற்கொள்ளப்பட்டது.  
  • 1953 ஆகஸ்ட் 11 அன்று, 5202 ஆம் இலக்க பொலிஸ் வர்த்தமானி II இன் படி 1953 ஆகஸ்ட் 27 ஆந் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லெம்புறுகன் அவர்களின் கீழ் பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1954 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபத் மகாராணி அவர்கள் நாட்டுக்கு வருகைத்தந்த போது, பொலிஸ் போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்களும் வாகன அணிவகுப்பு கடமைகளிலும் ஈடுபட்டனர்.
  • 1955 ஆம் ஆண்டில் உப பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன வரகாகொட, பொலிஸ் சாஜன்ட் வோலி பெஸ்டியன் ஆகிய உத்தியோகத்தர்களின் வழிநடத்துதலின் கீழ் பொதுமக்களுக்கு போக்குவரத்து சட்டங்களை விளக்கும் வீதி நாடகக் குழுக்கள் போக்குவரத்து தலைமையகத்தில் தொடங்கப்பட்டது.
  • 1957 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக முதலாவது பொலிஸ்மா அதிபர் போக்குவரத்து கற்கைநெறி வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
  • கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 1985 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
  • தற்போது கொழும்பு நகரில் போக்குவரத்து முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக பொலிஸ் நகர்புற போக்குவரத்துப் பொலிஸ் மற்றும் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1984 ஆம் ஆண்டு பணிப்பாளர் ஒருவரின் கீழ் போக்குவரத்து தலைமையகம் செயற்பட்டதுடன், பிற்காலத்தில் அதாவது, 1993 ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கீழ் கொண்டுவரப்பட்டு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிராந்தியம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்காக 1992 ஆண்டு கனிஷ்ட போக்குவரத்து கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டது.
  • தற்போது, சகல பொலிஸ் நிலையங்களிலும் போக்குவரத்துப் பிரிவுகள் நிறுவப்பட்டு, அப் பிரிவுகளை பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகள் அவதானிக்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுகளின் பொறுப்புகள்.

1953 நவம்பர் 11 ஆம் திகதி 5202 இலக்க பொலிஸ் வர்த்தமானி 11 இன் படி  ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுகளின் கடமைகளும் அதன் செயற்பாடுகளும்.

 

  1. போக்குவத்து பிரச்சனைகள் குறித்து அதன் தொடர்புடைய பொலிஸ் பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு, வீதிப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் வரைபுகளை தயாரித்தல்.
  1. வீதி அமைப்புகளிலுள்ள பொறியியலாளர்கள் மற்றும் சிறிய பிரச்சனைகள் தொடர்பாக அவதானித்து ஆய்வுகளை மேற்கொண்டு இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பரிந்துரை வழங்குதல்.
  1. பணிவாகவும், சட்டத்தை மதிக்கக்கூடிய ஓட்டுநர்கள் மற்றும் வீதிகளை ஒழுக்கத்துடன் பயன்படுத்தும் நபராக உருவாக்குவதற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரஜைகளுக்காக போக்குவரத்து ஒத்திகை செயற்திட்டங்களும் போக்குவரத்து விரிவுரைகளையும் நடாத்துதல்.  
  1. அரச நிகழ்வுகள், உள்நாட்டு வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் முக்கிய பரமுகர்களின் முன் அணிவகுப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு கடமைகளை திட்டமிடுதல் மற்றும் நடாத்துதல்.
  1. அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சர்களின் ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பதவி உயர்வுக்கான நேர்காணல் செய்யும் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல்.
  1. போக்குவரத்துக் கட்டுப்பாடு, வீதிப் பாதுகாப்பு தொடர்பான மாநாடு மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு பொலிஸ்மா அதிபர் அவர்களின் ஆலோசனைக்கமைய தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் நிருவனங்களுக்கு அறிவுரை வழங்குதல்.
  1. நாடுபூராக வீதி விபத்து தொடர்பான புள்ளிவிபரத் தரவுகளை உருவாக்குதல்.
  1. நாடளாவிய ரீதியில் வீதிப் பாதுகாப்பு திட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
  1. விசேட நிகழ்ச்சிகளின் போது போக்குவரத்து பயணங்கள் தொடர்பாக அறிவுரை வழங்குதல் மற்றும் ஏற்பாடுகள் செய்தல்.
  1. போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் அறிந்து அதன் நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்துக் விதிகள், வீதிப் பாதுகாப்பு தொடர்பாக அதன் தொடர்புடைய பொலிஸ் நிலையங்களுக்கு ஆலோசனை வழங்குதல்.
  1. வீதிப் போக்குவரத்து பயணங்கள் தொடர்பாகவும், தினமும் மாறுப்படும் ஒழுங்குவிதிமுறைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு சுற்றுநிரூபத்தை தயாரித்தல்.
  1. சகல பொலிஸ் நிலையங்களுக்கு சென்று போக்குவரத்துப் பிரிவுகளிலுள்ள புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை பராமரிக்கும் முறையாகள் தொடர்பாகவும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தல் தொடர்பாகவும் பரிசோதித்தல்.
  1. தேசிய மட்டத்திலான சைக்கிள் போட்டிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புகளை வழங்குதல்.
  1. இலங்கை பொலிஸ் பரிசோதகர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல், அதற்கு தொடர்புடைய பயிற்சிகளையும் நடாத்துதல்.
  1. இலங்கை பொலிஸ் சாஜர்ன்ட் மற்றும் கான்ஸ்டபிள் நிலையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு கனிஷ்ட போக்குவரத்து கற்கைநெறிகளை நடாத்துதல்.
  1. போக்குவரத்து உத்தியோகத்தர்களின் சீருடைகளை விநியோகிப்பதற்காக சகல பிரிவுகளிலும் களஞ்சியசாலைகள் அமைத்தல்.
  1. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாகவும் இலங்கை பொலிசிற்கு தேவையான பொருட்களை விநியோகிப்பதற்காக வருடாந்த மதிப்பீடு அறிக்கைகள் தயாரிக்க பொலிஸ்மா அதிபருக்கு உதவுதல்.
  1. நாடுபூராகவும் வீதிக் கட்டமைப்பினுள் போக்குவரத்து தொடர்பாக உள்ள சகல சட்டமூலங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு தேவையான திட்டங்களை வழங்குதல்.
  1. நாடுபூராக ஏற்படும் போக்குவரத்து விபத்து வழக்குகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் நிறுவன மேம்பாடு மற்றும் நடைமுறை போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைகளும் வழங்குதல்.

மேற்கண்ட,  விடயங்களை  செயற்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுகளில் நிருவாகப் பிரிவு, கல்விப் பிரிவு, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவு, பொறியியலாளர் அலுவல்கள், புள்ளிவிபரவியல் மற்றும் வீதி விபத்து தரவுகளை பகுப்பாய்வு நிலையம், ஊக்குவிப்பு பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளின் கடமைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.

Scroll to Top