Menu

வரலாறு

இலங்கையின் கடலோர மாகாணங்களிலுள்ள சில பிரதேசங்களை ஆட்சிசெய்த போர்த்துகேயர்கள் நாட்டிலுள்ள சிவில் நிருவாக முறைமையின் அதிகாரங்களில் எவ்வித மாற்றங்களையும்  ஏற்படுத்தவில்லை. 1602 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைத்தந்த ஒல்லாந்தர்கள் 1968 ஆம் ஆண்டின் போது கடலோர மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாண தீபகத்தையும் அவர்களின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவருவதில் வெற்றிகளை  கண்டுள்ளனர்.

கொழும்பு நகரத்தினுள் பொலிஸ் நிருவாகத்தை அமைக்கும் நோக்குடன், இலங்கை பொலிஸ் திட்டத்தை ஆரம்பித்து அதன் பொறுப்பை ஒல்லாந்தர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1659 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையை இரவு வேளையில் பாதுகாப்பதற்காக சம்பளம் வழங்கப்பட்ட பாதுகாப்பாளர்களை நியமிப்பதற்கு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய, இரவு வேளையில் ரோந்து நடவடிக்கைக்காக தடித்த மற்றும் சாதாரண வீரர்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர். அதனூடாக அவர்கள் இந்நாட்டு பொலிசின் முன்னோடியாகவே கருதுப்படுகின்றார்கள். ஒல்லாந்தர்களால் முதன் முதலாக பொலிஸ் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் ஆரம்பக்கட்டமாக மூன்று பொலிஸ் நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டதுடன். ஒன்று கோட்டையின் வடக்கு வாயிலிலும், இரண்டாவது கோட்டை மற்றும் புறக்கோட்டையை இணைக்கும் மேம்பாலத்திற்கு அருகாமையிலும், மூன்றாவது புறக்கோட்டை கைமன் மணிக் கோபுரத்திற்கு அருகாமையிலும் ஆகும். மேலும் புதுக்கடை டச்சு உத்தியோகத்தர் கொழும்பு மாவட்ட அலுவலகம் “மடுவ” என்ற, புறநகர் பகுதிக்கு பொலிஸ் நிலையமாக செயல்பட்டது.

பிரித்தானியர் காலத்தில் :

1796 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆந் திகதி ஒல்லாந்தர்கள் பிரித்தானியாவிடம் சரணடைந்தனர். பிரித்தானியர்கள் நகரத்தை கையகப்படுத்தியப் பின்னர், சில காலங்கள் இராணுவத்தினரால் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட்டதுடன்,  தடைசெய்யப்பட்ட பிஸ்கல் அலுவலகம் 1797 ஆம் ஆண்டு மீண்டும் நிறுவப்பட்டது. பொலிஸ் மேற்பார்வை செய்வதற்காக மேலதிக கடமை காரணமாக பிஸ்கல் அவர்களுக்கு அதிக சுமை ஏற்பட்டதை அறிந்த ஆளுநர் பெட்ரிக் நோர்த் அவர்கள், பிரதம நீதியரசர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று பொலிஸ் துறையை மேற்பார்வையிடும் பணியை நீதவான்கள் மற்றும் பொலிஸ் நீதியரசர்களிடம் ஒப்படைத்தார்.   

1805 ஆம் ஆண்டில் பொலிஸ் பணியை தெளிவாக வரையறுக்கப்பட்டு, பொது மக்களின் பாதுகாப்பு, சுகநலம் மற்றும் இலகுவாக தொடர்புப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, குற்றங்களை தடுத்தல் மற்றும் வெளிக்கொணர்தல் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதலுடன், பொலிஸ் பணியானது ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸ் கான்ஸ்டபிள் நிலையை உருவாக்கியதுடன் அதன் சகல பணிகளும் பொலிசாரின் ஊடாகவே நடைபெற்றது. 

1806 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் கொழும்பு நகரத்தை 15 பிரிவுகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் மேற்பார்வை செய்வதற்காக பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நியமிக்கப்பட்டன.

தேசிய பொலிஸ்

நாடளாவியரீதியில் பொலிஸ் துறையை மறுசீரமைப்பதற்காக நற்பண்புகளைக் கொண்ட நபரை தேடிக்கொண்டிருந்த ஆளுநர் அவர்கள், திறமையான உத்தியோகத்தரின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவை நாடினார். பம்பாய் பொலிசில் “ரத்னகிரி ரேஞ்சர்ஸ்” பொறுப்பிலிருந்த ஜீ.டப்ள்யூ.ஆர் கெம்பல் அவர்கள் இப் பாரிய பொறுப்பை ஏற்பதற்கு தகுதியுடையவர் என பம்பாய் ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டார். கெம்பல் அவர்கள் ஆளுநர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் 1866 ஆம் ஆண்டு செப்தெம்பர் 03 ஆம் திகதி பிரதான பொலிஸ் அத்தியட்சகராக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தை  திருத்தியமைத்து, 1867 இல் பிரதான பொலிஸ் அத்தியட்சகராக இருந்த பொலிஸ் படையணி பிரதானியின் பதவிநிலையை பொலிஸ்மா அதிபராக மாற்றியமைக்கப்பட்டது.  இதற்கமைய, 1866 ஆம் ஆண்டு செப்தெம்பர் 03 ஆந் திகதியன்று நாட்டின் தற்போதைய பொலிஸ் சேவையை ஆரம்பிக்கப்பட்ட தினமாக கருதப்படுகின்றது. பொலிஸ் படையணியை திறமையான அமைப்பாக உருவாக்கி  அதற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கிய பெருமையின் பெரும்பங்கு கெம்பல் அவர்களையே சாரும். அவர் முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, பொலிஸ் பிரதேச படையணிக்கு பதிலாக தேசிய படையணியாகவும் மாற்றியமைத்தார்.

முதலாவது பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அவரின் பணியாட்டொகுதி

சட்டமா அதிபர் அவர்களின் செயலாளர் தோமஸ் ஒஸ்வின் அவர்கள் கொழும்பின் முதலாவது பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.  சீ.எம். சுபட் அவர்கள் பிரதான கான்ஸ்டபிளாக நியமிக்கப்பட்டதுடன், ஒல்லாந்தர் கான்ஸ்டபிள் ஐவரும், பொலிஸ் சாஜன்ட் 10 பேர் மற்றும் 150 அலுவலக பணி உதவியாளர்களும் இதன்போது நியமிக்கப்பட்டனர். ஊவா பிராந்தியத்திலுள்ள லொக்குபண்டா துனுவில அவர்கள் கண்டி பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார். பொலிஸ் அத்தியட்சகராக பொறுப்பேற்ற இவர் முதலாவது இலங்கையராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார். கொழும்பு  பொலிஸ் துறையை மறுசீரமைப்பு செய்யும் பணி கொல்பேப்பர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவரின் படையணியில் பரிசோதகர்கள், சாஜன்ட்கள் மற்றும்  கான்ஸ்டபிள்கள் என மூன்று தரங்களாக பிரித்தார். அலுவலக பணி உதவியாளர்கள் என்ற புதிய பதவியை இரத்துசெய்து, 1847 ஆம் ஆண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர்கள் ஆகிய பதவிநிலையும் உருவாக்கினார். பொலிஸ் பரிசோதகர் டி.லா. ஹாப் அவர்கள் முதலாவது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு செய்யப்பட்டார்.

இலங்கையின் முதலாவது பொலிஸ்மா அதிபர்

1947 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம்  திகதியன்று இலங்கையின் பொலிஸ்மா அதிபராக பதவியேற்ற ஶ்ரீமத் றிச்சட் அலுவிஹாரே அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அவர் இலங்கை பிரஜையின் முதலாவது பொலிஸ்மா அதிபரும் ஆவார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றப்பின்னர்   பொலிஸ் படையணி அதன் காலணித்துவத்திலிருந்து தேசிய பொலிசாக விரிவுப்படுத்துவதற்கான பாரிய பொறுப்புக்கு ஶ்ரீமத் றிச்சட் அலுவிஹாரே அவர்கள் முகம்கொடுத்துள்ளார்.

மேலும், இவர் ஆண்களின் நலன்புரிகள், குற்றவியல் விசாரணைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றை புலனாய்வு செய்தல், பெண் பொலிசார், குற்றங்களை தடுப்பதற்கான சங்கங்கள், கிராமப்புற தன்னார்வலர்கள், பொலிஸ் மோப்ப நாய்கள், பொதுமக்கள் நட்புறவு, புதிய பயிற்சி முறைகள் மற்றும் ஒப்பந்த பயிற்சி சேவைகளை மேம்படுத்துதல் போன்ற புதிய நடவடிக்கைகள் இதன்போது அறிமுகப்படுத்தினார்.   மேலும் அதன் கடமைகள் வரையறுக்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணி குற்றங்களை தடுப்பதே இதன் நோக்கமாகவும் கருதினார்.    

பிரதான வீதிக்குள் நுளையும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த  பிரதிப் பொலிஸ்மா அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றம் வீதிப் பாதுகாப்பு பிராந்தியமானது பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இப் பிராந்தியமானது போக்குவரத்து விபத்துகளை தடுப்பதற்காகவும், அதன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டில் சிறந்த போக்குவரத்து முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சகல பிரதேச பொலிஸ் பிரிவுகளுக்கும் சுற்றரிக்கைகளை வெளியிடுவது இப் பிராந்தியத்தின்  பொறுப்பாகும்.

தற்போது, போக்குவரத்துப் பிரிவுகளின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலுக்காக மாவட்டப் போக்குவரத்து பிரிவுகள் நிறுவப்பட்டு, அவற்றை பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிராந்தியம் மற்றும் ஏனைய பிராந்தியங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடன் இணைந்து கண்கானிக்கப்படுவதுடன், தினமும் 24 மணித்தியாலங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

மேலும், பெருந்தெருக்களின் பயன்பாடு குறித்து முறையான தொலைநோக்கத்தை வழங்குவதற்காக சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை இலக்காகக் கொண்டு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மிகவும் உயர்மட்டத்தில் விரிவுப்படுத்தும் நோக்கில், சகல பொலிஸ் நிலையங்களிலும் குற்றப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் எனும் பெயரிலுள்ள பிரிவுகளானது பொலிஸ் நிலையங்களிலும் நடைமுறையில் உள்ளதுடன், உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் வரை பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல குற்றங்கள் தொடர்பாக பல்வேறு நடைமுறைகளை எடுப்பதற்கான அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், தங்களின் முறைப்பாடுகளை பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களினூடாக பதிவு செய்வதற்கான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் அவர்களின் சுயமாரியாதைக்கு பங்கம் ஏற்படாமலும்,  தவறான தரப்பினர்களின் கேலிக்கைகளுக்கு ஆளாகாதவாறும், பொதுமக்கள் நடமாடாத இடங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நாடளாவியரீதியில் இச் சேவைகளை  நடைமுறைப்படுத்துவதற்காக சகல பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பு உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுத்து இக் கடமைக்காக ஈடுபடுத்தியுள்ளதுடன் அவர்களுக்கு விஷேடப் பயிற்சிகளும்  வழங்கப்பட்டு வருகின்றன. 

விஷேடமாக எமது சமூக இளைஞர்களுக்கிடையில் வேகமாக பரவிவரும் போதைப் பொருள் பாவனைகளுக்கு அடிமையாகிவருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.   இப் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் ஊடாக தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றது. எவ்வாறாயினும், இவ்வாறான போதைப் பொருள் பாவனைக்கு  அடிமையாகும் நபர்களை எவ்வாறு கையாளுவது தொடர்பாக சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற கொடிய நோயை நமது சமூகத்திலிருந்து விரைவில் இல்லாததொழிப்பதற்கான கடப்பாட்டை பொலிசார் நன்கு உணர்ந்துள்ளதால் அது தொடர்பாக விசேட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், பொலிசாருக்கு இரகசிய தகவல்களை வழங்குபவர்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களின்  அடையாளங்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் போது அவர்களை பாதுகாக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.  நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் அல்லது மேற்கொள்ளப்படுவதற்கு தயாராகும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை, அநாமதேய தொலைபேசி  தகவல்கள் ஊடாகவோ அல்லது கடிதத்தின் ஊடாகவோ பொலிசாருக்கு தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல முறைப்பாடுகளும் கருத்தில் கொண்டு பரிசீலனைகள் செய்யப்படும்.  இதனூடாக பொலிசாருக்கு தகவல்கள் வழங்குபவர்கள் தங்களின் கடமைப்பாடுகளை இடையூறுயின்றி செய்வதற்கும் தகவல் வழங்குபர்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் வழிமுறைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லையெனில் சமூகத்தில் அவர்களின் கடமைகள் ஊடாக வழங்கி அர்ப்பணிப்புக்கு கடுமையான விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். இந்த தகவல்களை தொடர்புடைய பொலிஸ் நிலையம் அல்லது 1-1-9 என்ற அவசர அழைப்பு சேவைக்கு வழங்கவும் முடியும். குற்றவாளிகளை கண்டறிவதற்காக மற்றும் கைது செய்வதற்காக மிக முக்கிய தகவல்களை பொலிஸ் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் இவ்வாறான நபர்கள் தொடர்பாக சமூக அக்கறை கொண்ட குடிமக்களுக்கு ஒரு ஊக்கமாகவும், தகவல்களை வழங்குபவர்களுக்கும் அவர்களின் பொதுநலம் சார்ந்த முயற்சிகளுக்கும் சிறந்த தகவல்களை வழங்குபர்களுக்கும் ஊக்கத் தொகையாக பெறுமதியான பரிசில்களும் வழங்குவதற்கான நடைமுறைகளும் உள்ளன.

விசேடமாக பொதுமக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக தற்போதைய பொலிசார் உறுதியாக உள்ளனர். எவ்வாறாயினும், பொதுமக்களிடம் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பதவியினர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இந்த அனுகுமுறையை பொலிசார் மற்றும் சாதாரண மக்கள் ஆகிய இரண்டு பிரிவினரும் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால், முறைப்பாடுகள் செய்வதற்காகவோ அல்லது உதவிகள் தேவைப்பட்டாலோ பொதுமக்கள் தவறாமல் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இத்தகைய நட்புமிக்க சூழ்நிலையில் அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் நல்லெண்ணத்துடனும் புரிதலுடனும் மற்றும் அவதானத்துடனும் மேற்கொள்ளப்படுமானால், பொலிசார் மற்றும் அப் பிரதேசத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கிடையில் சிறந்த தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும். அதனால் தலைமைத்துவம், நேர்மை மற்றும் செயல்திறன் போன்ற குணங்களைக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் சிவில் சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் அதிகமானவை.

எமது நாட்டில் பொலிஸ் சேவை நிர்மாணிக்கப்பட்டு 156 வது வருடத்தை கொண்டாடும் இச் சந்தர்ப்பத்தில், தற்போதைய பரம்பரைக்கு முன்னர் பெறுமதியான உயிர்களை தியாகம் செய்து கடமையாற்றிய சகல உத்தியோகத்தர்களை நினைவுகோருவது எமது பொறுப்பாகும். அவர்கள் தங்கள் மனசாட்சியுடன் கடமைகளை நிறைவேற்றியதுடன், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கு மாத்திரமின்றி, பல சிரமங்களை எதிர்கொண்டு அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதே ஆகும். இது தொடர்பாக, 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினர்களின் சிறப்பான சேவைகள் மற்றும் அவதானமிக்க நடவடிக்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. தற்போதைய பொலிஸ் சேவையிலுள்ள ஏனைய சகோதர உத்தியோகத்தர்களுக்கு இவர்கள் முன்மாதிரியாக திகழ்கின்றார்கள் என்றே கூற வேண்டும். பிரமுகர்களின் பாதுகாப்புகளை வழங்கும் போது இவர்களின் பங்கானது மிக முக்கியமானது.

தற்போது 90000 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுடன் 45 பிரதேச பிரிவுகளும், 80 செயல்பாட்டுப் பிரிவுகளும் மற்றும் 607 பொலிஸ் நிலையங்களும் செயல்பாட்டில் உள்ளன. பொலிஸ் சேவையின் ஒரு பகுதியாக  பொதுமக்களின் உதவியை நாங்கள் எதிர்பார்ப்பது மற்றும் நமது முன்னோர்களால் வழங்கப்பட்ட பழமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாகவும் நவீன முறைகள், தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அர்ப்பணிப்புனும் பக்தியுடனும் இன்றும் பொலிஸ் சேவையில் ஈடுபடுகின்றோம்.

பொது மக்களின் எதிர்பார்ப்புகளையும், எதிர்கால பொலிஸ் நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.   பிரதானமாக சமூக குற்றங்களை பயமின்றி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுபவர்களை விரைவாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது எங்களின் பிரதான நோக்கமாகும். 

Scroll to Top