இரத்தினபுரி பிரிவின் ஓபநாயக பொலிஸ் நிலைய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தின் கட்டடம் சகல வசதிகளுடன் 20.05.2025 ஆந் திகதி மாலை வேளையில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில், சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குனதிலக அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்டுகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்கள் முகம் கொடுக்கும் குற்றங்கள் தொடர்பாகவும், அவர்களின் தனியுரிமைகள் பாதுகாக்கும் வகையில் முறைப்பாடுகளை செய்வதற்கான முறையான சூழலை உருவாக்குவதற்கும், அவர்களுக்கு ஏற்படும் குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கும், பொலிசார் கடமையாற்றுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும் இவ்வாறு நவீன வசதிகளுடன் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தை ஸ்தாபிக்கப்படுவதற்கான நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் இத் திட்டமானது நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இக்கட்டடமானது இவ்வாறு கட்டப்பட்ட ஒரு கட்டடமாகும்.
இரத்தினபுரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுல மஹகிரில்ல அவர்களும், இரத்தினபுரி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கப்பில பிரேமதாச அவர்களும் உயர் அதிகாரிகளும் இதன் போது கலந்துகொண்டனர்.