Menu

சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகம்

செயற்பணி
சிறுவர் மற்றும் பெண்களுக்காக வன்முறையற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குதல்.

செயல்நோக்கு
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான தீவிர வன்முறைகள் மற்றும் வேறுபாடான அணுகுமுறைகளை தடுக்கும் வகையில் சட்டத்தை அமுல்படுத்துதல், துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுப்பதும், குற்றவாளிகளை புனர்வாழ்விற்கு வழிவகுத்து சமூகத்தில் மீள இணைப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதனூடாக வன்முறையற்ற சிறந்த சமூகத்தை உறுதிப்படுத்தல்.

பொதுமக்கள் முறைப்பாட்டறை அறிமுகப்படுத்தியமைக்கான நோக்கம்

📧 மின்னஞ்சல்        : cwb.online@police.gov.lk
📞 அவசர அழைப்பு எண்: 109
📞 தொலைபேசி எண்: 011-2444444

சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினூடாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு விதத்தில் துன்புறுத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப உறுப்பினர்களின் துன்புறுத்தல், சிறுவர்களுக்கு பாதுகாப்பின்மை, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை கொடூரமாக நடத்துதல் போன்றவற்றுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்து அவற்றை உடனடியாக தடுத்தல்.

சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகம் மூலம் கீழ்க்காணும் குற்றங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன:

  • சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
  • ஏதேனும் ஒரு வகையான வன்முறை
  • பாலியல் துன்புறுத்தல்கள்
  • குடும்ப வன்முறைகள்
  • பாதுகாப்பின்மை
  • குழந்தை தொழிலாளர் பிரச்சனை
  • கொடூரமான நடத்தைகள்

போன்றவற்றுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்து அவற்றை உடனடியாக தடுத்தல்.

  • பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பெறப்படாமை அல்லது விசாரணை செய்யப்படாமை
  • சைபர் குற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் இல்லாமையின் போது,

cwb.online@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும், 109 அவசர அழைப்பு இலக்கம் மற்றும் 011 -2444444 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக நேரடியாக முறைப்பாடுகளை வழங்குவதற்காக சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தில் முறைப்பாட்டு அறை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  மேலும்,

தங்களின் சட்டரீதியான பாதுகாவலர் அல்லது  வேறு நபர்ஒருவரினால் செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக அல்லது வேறு காரணங்களினால் பொலிஸ் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று முறைப்பாடுகளை வழங்குவதற்கு விருப்பமில்லாத இளம் பருவத்தினர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இவ் மின்னஞ்சல் முகவரி மற்றும் அவசர அழைப்பு இலக்கத்தினூடாக முறைப்பாடுகள் செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது.

சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக ஒழிப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் அவர்களின்  மேற்பார்வையின் கீழ், 24 மணித்தியாலங்களும் நடைமுறைக்கு வரும் வகையில் பொதுமக்கள் முறைப்பாட்டறையினூடாக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக, அதன் தொடர்புடைய பொலிஸ் நிலையங்கள் அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விலாசம்

இலக்கம் 78,01 ஆம் மாடி
முத்தார் ப்ளாஷா கட்டடம்,
கிரேன்ட்பாஸ் வீதி,
கொழும்பு – 04
இலங்கை

தொலைபேசி
அவசர அழைப்பு  : 109
நேரடித் தொடர்பு : 011-2444444
தொலைபேசி இல : 011-2337041

மின்னஞ்சல் முகவரி
dir.cwbureau@police.gov.lk
cwb.online@police.gov.lk

Address

No. 78, 1st Floor,
Mukthar Plaza Building,
Grandpass Road,
Colombo 14,
Sri Lanka

Phone

Emergency : 109
Hotline : 011-2444444
Phone : 011-2337041

E-mail

dir.cwbureau@police.gov.lk
cwb.online@police.gov.lk

Scroll to Top