பொலிஸ் சேவையிலுள்ள அனைத்து தரத்திலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்புரிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் எதிர்காலத்திற்கான புதிய உத்தியோகத்தர்கள் குழுவை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டமானது பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 02.08.2025 ஆந் திகதி காலை வேளையில் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் தலைவரும் பதில் பொலிஸ்மா அதிபரின் துனைவியுமான சட்டத்தரணி திருமதி. நில்மினி சமரதுங்க அவர்களும், ஓய்வுப்பெற்ற பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன அவர்களின் துனைவி, சேவை வனிதையர் அன்னையர் பிரிவின் ஆலோசகருமான சிரேஷ்ட சட்டத்தரணி அனோமா குனதிலக ஆகியோரின் தலைமையில் நடைபெற்றதுடன். அப் பிரிவின் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
புதிய உறுப்பினர்களை பதிவு செய்தல், கடந்த வருடம் கணக்கறிக்கை சமர்ப்பித்தல் போன்றவை இக்கூட்டத்தில் இடம்பெற்றதுடன், புதிய பதவிக்கான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான உள்ளக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப நலன்புரிக்காக எதிர்கால புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டுள்ளது.
யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தலைவர் – சட்டத்தரணி திருமதி. நில்மினி நீட்டா சமரதுங்க அவர்கள்.
உபத்தலைவர் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் திருமதி. நிஷானி செனவிரத்ன அவர்கள்.
செயலாளர் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் திருமதி. ரேணுகா ஜயசுந்தர அவர்கள்.
பொருளாளர் – சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திருமதி. மதாரா ஆரியசேன அவர்கள்.
உப பொருளாளர் – பெண் பிரதான பொலிஸ் பரிசோதகர் திருமதி. நிமாலி பொன்சேகா அவர்கள்