Menu

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் பங்கேற்றார்

02.08.2025 ஆந் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற  இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பாக சட்டத்தரணி சங்கத்தின் 02 வது மாநாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்கள் கலந்துகொண்டுள்ளார். 

இந் நாட்டின் பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன  அவர்களின் தலைமையில் சட்டத்தரணிகள், நிறுவன தலைவர்கள், தேசிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப  கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் இத் துறையிலுள்ள நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை முகம்கொடுக்கும் சட்ட சவால்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிஜிட்டல் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், சைபர் குற்றங்கள் தொடர்பாகவும், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தல் மற்றும் தரவுகளை பாதுகாப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை பொலிசார் கவனத்தை செலுத்தி இக் காலத்திற்கு ஏற்றவாறு தற்போதைய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் முறைமை தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

Scroll to Top