வடமேல் மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் 03.08.2025 அன்று குருநாகல் மலியாதேவ கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்களும் வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. அஜித் ரோஹண அவர்களும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது அதிகளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன் அனைவருக்கும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டின் அமைதியை பேணுவதற்காக 24 மணித்தியாலங்களும் அர்ப்பணிப்புடன் செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டியதுடன் அவர்களின் நலன்புரி தொடர்பாகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர் அவர்களும் பதில் பொலிஸ்மா அவர்களும் இந் நிகழ்வில் உரையாற்றினர்.