Menu

கொழும்பு போக்குவரத்து தலைமையகத்தின் உத்தியோகத்தர்கள் இம்முறை கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு வருகை

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு. மனோஜ் ரனகல அவர்களின் தலைமையில் 11.07.2025 அன்று கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர்களுக்கு போக்குவரத்துச் சட்டம் மற்றும் வீதிகளில் பாதுகாப்பாக பயணிப்பது தொடர்பான தெளிவூட்டல்கள்  நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் போக்குவர்த்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டனர்.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பாக நிபுணத்துவம் கொண்ட விரிவுரையாளரான கல்வியற் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரவீன் சுமனரத்ன அவர்களும் ஓட்டுநர் பாடசாலையின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தயால் காரியவசம் ஆகியோரால் ஆனந்த கல்லூரி பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்ட விரிவுரைகள் மற்றும் வீதி  காட்சிகள், நடைமுறை செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வானது காலை முதல் மாலை  வரை சுமார் 05 மணித்தியாலங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் லால் திசாநாயக அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு 3000 இற்கும் மேற்பட்ட பாடசாலை  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றினர். 

பாடசாலைக்கு வருகைத்தரும் மாணவர்கள் ஒவ்வொருவரும் காலையில் ஆனந்த கல்லூரிக்கு முன்னால் வாகனங்களை செலுத்து முறைமை தொடர்பாக மாணவர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதோடு, மோட்டார் சைக்கிளில் வரும் மாணவர்கள் பாதுகாப்புக்கான தலைக்கவசம் அணிவதன் அவசியத்தையும், வீதியை கடக்கும் போது பாதசாரிகளின் முக்கியத்துவத்தையும் விரிவாக மற்றும் தெளிவாக எடுத்துரைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுக்காக Fairfirst Insurance  என்ற தனியார் நிறுவனம் அனுசரணை வழங்கியதுடன், சொற்பொழிவின்போது போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் எழுப்பிய வினாக்களுக்கு சரியான பதில்கள் வழங்கிய ஆனந்த கல்லூரியின் மாணவர்களுக்கு போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்களால் பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.

Scroll to Top