சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்று அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்வதற்காக சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு விசாரணைப் பணியகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு இலக்கம் “109” தொடர்பாக பொது மக்கள் அவதானத்தை செலுத்தும் நோக்கில், சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு விசாரணைப் பணியகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நடைப்பயணமானது 19.07.2025 ஆந் திகதி மாலை வேளையில் கொழும்பு ஆமர் வீதியிலிருந்து காலி முகத்திடல் வரை நடைபெற்றது.
சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திருமதி. ரேணுகா ஜயசுந்தர அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அப் பணியகத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமா ஹேவா அவர்களும், கம்பஹா, களனி, மத்திய கொழும்பு, கொழும்பு தெற்கு, பாணந்துறை, எல்பிட்டி, காலி, மாதறை, தங்கல்லை மற்றும் குளியாபிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகங்களில் கடமையாற்றும் 350 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
நடைப்பயணமானது ஆமர்வீதியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்திற்கு அருகாமையில் மாலை 2.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மருதானை ஊடாக கொழும்புக் கோட்டை புகையிரத நிலையம் முன்பாகவும், காலி முகத்திடல் வரை சென்றதுடன் “109” விசேட செயற்பாட்டு அறை தொடர்பாகவும் மற்றும் சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் துண்டுபிரசுரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், காட்சிகள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, வீதி நாடகங்கள் மற்றும் காலி முகத்திடலில் நடாத்தப்பட்ட விஷேட நிகழ்ச்சிகளினூடாக பொது மக்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.