Menu

ஊவா மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிருவாக கட்டடம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜேயபால அவர்கள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய ஆகியோரால் நாடளாவிய ரீதியில் பொலிஸ் உத்தியோகத்தரகளுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றனர்.  

அதற்கமைய ஊவா மாகாணத்தில் 48 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 400 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது பொலிஸ் கடமைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. 

இவ் நிகழ்ச்சித்திட்டம் நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட திவுலபெலெஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை கௌரவ அமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந் நிகழ்வின் போது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கௌரவ செயலாளர் திரு. ரவி செனவிரத்ன அவர்கள், ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. மகேஸ் செனவிரத்ன, பதுளை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் லக்ஶ்ரீ விஜேசேன அவர்கள், மொனராகலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அவர்கள் உட்பட பதுளை, பண்டாரவலை மற்றும் மொனராகலை ஆகிய பொலிஸ் அத்தியட்சர் பிரிவுகளுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களும், உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர். 

மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடற்தகுதி மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதை நோக்கமாகக் கொண்டு ஊவா மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக பதுளை பொலிஸ் நிலைய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சி உபகரணங்களுடன், உடற்பயிற்சி நிலையமொன்றை பதில் பொலிஸ்மா அதிபர் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இவ் உடற்பயிற்சி நிலையத்திற்கு தகுதிப்பெற்று பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந் நிகழ்வில் ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Scroll to Top