பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் 2025.08.20 ஆந் திகதியன்று மாலை வேளையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள், பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல அவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுப் பெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.டபிள்யூ.ஆர்.பீ செனவிரத்ன ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பொலிஸ்மா அதிபராக தனது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும், இம் முக்கிய சந்திப்பை நினைவு கூர்ந்த வகையில், பொலிஸ்மா அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.