Menu

புதிய பொலிஸ்மா அதிபருக்கு விசேட அதிரடிப் படையினரால் முதன்மை மரியாதை அணிவகுப்பு

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள், 2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி இன்று காலை, பொலிஸ் விசேட அதிரடிப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். அவர் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டீ.ஜீ. சமந்த த சில்வா மற்றும் தலைமையகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை சந்தித்தார்.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப் படை தலைமையகத்துக்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் ஆரம்பத்தில், அவருக்கு விசேட அதிரடிப் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ்மா அதிபர், நாட்டில் ஏற்படும் எந்தவொரு அவசர நிலைகளுக்கும் சந்திப்பதற்காக எப்போதும் தயாராக இருப்பதோடு, திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தவும், சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கவும் விசேட அதிரடிப் படை வழங்கும் தனித்துவமான பங்களிப்பானது, இந்நாட்டிற்கும் இலங்கை பொலிஸ் துறைக்கும் பெருமைக்குரியதாக இருப்பதாகக் கூறினார். மேலும், இப் படையின் திறன்கள், வலிமைகள் மற்றும் விரைவான செயற்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top