Menu

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 41வது நினைவுத் தினம்

நாட்டின் நலனுக்காக உயிர்த் தியாகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக, விசேட அதிரடிப் படையின் 41வது வீரர்கள் நினைவுத் தின நிகழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன அவர்களின் தலைமையில், 2025 செப்டெம்பர் 01ஆம் திகதி, களுத்துறை கட்டுக்குறுந்து விசேட அதிரடிப் படை பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களும் பங்கேற்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 464 வீரர்கள் மற்றும் 6 சிவில் அதிகாரிகள் தாய்நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழந்துள்ளனர். 

மேலும், யுத்தத்தின் போது காயமடைந்த 774 வீரர்கள் முழுமையாக அங்கவீனமடைந்துள்ளனர்.

1984 செப்டெம்பர் 01ஆம் திகதி, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பிரதேசத்திற்கிடையில் வாகனத்தில் பயணித்த போது, எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்புகளால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் மோதியதால், விசேட அதிரடிப் படையின் நான்கு உறுப்பினர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்தனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்கள்:

• சாஜர்ன்ட் ஆர். சந்திரசேன

• பீ.ஏ. ஏக்கநாயக

• எல்.டி. நானயகார

• சாஜர்ன்ட் சாரதி எச்.டி. சுமனசேகர

இச் சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த மேலும் 11 உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

இந்த துயரச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதி வீரர் தினமாக நினைவுகூரப்படுகிறது. இவ்வருடமும், வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை இணைத்து, கௌரவத்துடன் நினைவு கூறும் நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரி, பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.ஜீ. சமந்த த சில்வா உட்பட சிரேஷ்ட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். மேலும், பயிற்சி மற்றும் உயர் பயிற்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களும், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

Scroll to Top