Menu

அநுராதபுரம் புனித பூமிக்கு பொலிஸ் கொடியை ஏந்திச் சென்றார் பொலிஸ்மா அதிபர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 03 ஆம் திகதி கொண்டாடப்படும் பொலிஸ் தினத்தை முன்னிட்டு, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மதிப்பிற்குரிய பௌத்த தேரர்களின் வழிநடத்தலின் கீழ், பொலிஸ் கொடியையும் பொலிஸ் பிரிவுகளின் கொடியையும் ஶ்ரீ மஹா போதியின் புனித வெள்ளரசு மரத்தின் கீழ் வைக்க, அநுராதபுரம் புனித பூமியை சென்றடைந்தனர்.

இதன் மூலம் இலங்கை பொலிசுக்கும் நாட்டுக்கும் ஆசிர்வாதம் பெறப்பட்டது.

இந்த நிகழ்வில், 2025 செப்டெம்பர் 01 ஆம் திகதி, பணிகளை சிறப்பாக செய்த பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரிகள் புனித ருவான்வெலிசேய மற்றும் ஶ்ரீ மகா போதி புனித பூமியில் மத வழிபாடுகளை மேற்கொண்டனர்.

Scroll to Top