தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் சில காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட உணவகம், மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பொறியியல் பிரிவினரால் குறுகிய காலத்தில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி, பொலிஸ் வெகுமதியிலிருந்து வழங்கப்பட்டது.
வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. திலக் C.A. தனபால அவர்களின் அழைப்பின் பேரில் வருகைத்தந்த, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி திரு. பிரியந்த வீரசூரிய அவர்களால் 2025 செப்டம்பர் 01ஆம் திகதி மாலை வேளையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வன்னி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. சமந்த விஜேசேகர அவர்கள், மன்னார் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் திரு. W.K.A.J. எரிக் ரஞ்சித் அவர்கள், திருகோணமலை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. L.Y.A. சந்திரபால அவர்கள், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு. ஜனக துஷார ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட உணவகம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காகவும், அவர்களின் தினசரி சேவைகளை மேலும் செயற்பாடானவையாக மாற்றவும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.