2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதியிலிருந்து கொம்பனிவீதியிலுள்ள 03 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காணியில் அமைந்த 12 மாடிக் கட்டடம் பொலிஸ் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி (இன்று) காலை, இலங்கை பொலிஸ்துறைக்கு புதிய தலைமையகம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது இலங்கை பொலிஸ் தினமான 2025.09.03 ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸ் துறையின் வரலாற்றில் ஒரு தனித்துவமான தருணமாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது சர்வமத ஆசிகளைப் பெற்ற பின்னர், அமைச்சர் புதிய பொலிஸ் தலைமையகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து , பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.