Menu

பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம் டேக்வாண்டோ போட்டியில் பொலிஸ் விசேட அதிரடிப் படைக்கு வெற்றி.

பொலிஸ்மா அதிபர் வெற்றிக் கிண்ணம் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா இலங்கைக்கான கொரியா தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon LEE) அவர்களின் தலைமையிலும், பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அவர்களின் பங்கேற்புடனும், 2025 நவம்பர் 4ஆம் திகதி மாலை, இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கொரியாவில் தோன்றி உலகப் புகழ் பெற்ற தற்காப்புக் கலையாகிய டேக்வாண்டோ (Taekwondo) கலை, இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சிக் காலத்திலிருந்தே பல ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய போட்டிகள் மாகாண மட்டத்திலும் நடத்தப்பட்டு, மேலும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் கொரிய கௌரவம் பெற்ற 6வது டான் கருப்பு பட்டை (6th Dan Black Belt) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை நடைபெற்ற போட்டியின் ஆரம்ப சுற்றுகள் அண்மையில் கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பயிற்சி பள்ளியில் நடைபெற்றன.

58 கிலோகிராம் கீழ் எடைப்பிரிவின் இறுதி போட்டி நிறைவு விழா மத்தியில் நடத்தப்பட்டது.

அதில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின்

• பொலிஸ் கான்ஸ்டபிள் 105855 N.P.N. பிரநந்து மற்றும்

• பொலிஸ் கான்ஸ்டபிள் 101324 R.M.K.N. ரத்நாயக்க

ஆகியோர் மோதிய கடும் போட்டியில், R.M.K.N. ரத்நாயக்க அவர்கள் வெற்றி பெற்றார்.

ஆரம்பத்தரத்தின் சிறந்த ஆண் விளையாட்டாளர் விருது, மேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கலுத்துறை பொலிஸ் கல்லூரி பொலிஸ் கான்ஸ்டபிள் 60105 W.M.M. விஜேசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தக் கிண்ணம் இலங்கை பொலிஸ் டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் மற்றும் மனிதவள முகாமைத்துவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் பிராந்தியத்திற்குப்  பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.என். சிசிர குமார அவர்களின்  கரங்களால் வழங்கி வைக்கப்பட்டது.

ஆரம்பத்தரத்தின் சிறந்த பெண் விளையாட்டாளர் விருது, சபரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த வரகாபொல பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 10398 N.D.S.P. வீரவர்தன அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டீ சொய்சா அவர்கள் வழங்கி வைக்கினார்.

சிரேஷ்டப் போட்டியில் சிறந்த விளையாட்டாளர் விருதை பொலிஸ் கான்ஸ்டபிள் 101324 R.M.N.K. ரத்நாயக்க அவர்கள் பெற்றார்.

பொலிஸ்மா அதிபர் மற்றும் கொரியா தூதுவர் அவர்களும் பயிலுநர்களின் போட்டியில் சாம்பியன் போட்டியில் வெற்றிப் பெற்ற மேல் மாகாண அணிக்கு வெற்றிக் கிண்ணமும் ஒட்டுமொத்த போட்டிகளிலும் அதாவது டேக்வாண்டோ கிண்ணத்தை சுவீகரீத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை டேக்வாண்டோ அணிக்கும் இணைந்து வழங்கி வைத்தனர்.   

மேலும், இரத்தினபுரி Diamond Kick டேக்வாண்டோ கழகத்தினர் வழங்கிய சிறப்பு கலை நிகழ்ச்சியும், பொலிஸ் கலாச்சார பிரிவின் நடனக் குழுவின் நிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன.

இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளும் Sri Lanka Police அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

Scroll to Top