Menu

12–16 வயதுக்கிடையிலான டென்னிஸ் வீரர்களை கௌரவிக்கும் வருடாந்த போட்டித் தொடர் இவ்வருடமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றன.

12–16 வயதுக்கிடையிலான டென்னிஸ் வீரர்களை கௌரவிக்கும் வருடாந்த போட்டித் தொடர் இவ்வருடமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றன.

இலங்கை டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து இலங்கை பொலிஸ் டென்னிஸ் சங்கம் வருடாந்தம் நடத்தும் 2025 – Sri Lanka Police Ranking Tournament போட்டித் தொடர் 2025.12.19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் கொழும்பு பொலிஸ் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 12 முதல் 16 வயதுக்கிடையிலான சிறுவர்கள் இப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆண் மற்றும் பெண் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

7-ஆவது முறையாக நடைபெற்ற இப் போட்டியில், திறமையின் அடிப்படையில் 12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை மதீஷ் பெர்னாண்டோ வென்றார். சேத்திய சில்வா இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

12 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், செனுலி திமன்சா விக்ரமரத்ன சாம்பியன் பட்டத்தை வென்றார். அதே பிரிவின் இரண்டாம் இடம் நதுலி குரகுலசூரியக்கு கிடைத்தது.

16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை யோனல் தங்கும்புர வென்றார். அகேன் மனோஹரன் இரண்டாம் இடத்தை பெற்றார்.

16 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் சாம்பியன் பட்டத்தை யோனெலி சேனாதீர கைப்பற்றினார்.

Scroll to Top