Menu

வீதி விபத்துகளைத் தடுக்கும் திட்டங்களுக்கு உதவியளிக்கும் புதிய தரவு முறைமை.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வீதி விபத்துகளை ஆய்வு செய்து, அவற்றின் புள்ளிவிவரங்களை பயன்படுத்தி அப் பகுதியில் விபத்துகளை குறைக்கும் தீர்வுகளை உருவாக்குவது, விதிகளில் மனித உயிர்களை காப்பாற்றும் முயற்சிக்கு சிறந்த பலன்களை அளிக்கும்.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரப் பகுதிகளிலும் பதிவாகும் வீதி விபத்து தகவல்களை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பகுப்பாய்விற்கு அனுப்புவதற்காக, பொலிஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு மென்பொருள் பயன்பாட்டின் மூலம் புதிய தரவு முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களின் தலைமையில் 19.02.2026 அன்று கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் மாநாட்டு மண்டபத்தில், இத்தரவு முறைமை முன்முயற்சி திட்டமாக மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. முறைமையின் துல்லியத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

முறைமையை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 142 டேப்லெட் சாதனங்களும், அவற்றிற்கான சிம் அட்டைகளும் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இத்தரவு முறைமை அறிமுக நிகழ்வில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்கள், குற்றவியல் மற்றும் போக்குவரத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு அவர்கள், கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த டி சில்வா அவர்கள், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பாளர்கள், பொலிஸ் பிரிவுகளிலுள்ள போக்குவரத்து பொறுப்பாளர்கள் மற்றும் நகர போக்குவரத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Scroll to Top